பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* --

98 - கம்பன் கலை நிலை

மேகம் வெண்மாரி பெய்யும், வள்ளல்கள் பொன்மாரி பொழி வர்; அது பயிர்களை வளர்க்கும் ; இவர் உயிர்களை வளர்ப்பர். அது இடி முதலிய கொடுமைகளுடன் கூடியிருக்கும்; இவர் நகை இன்சொல் முதலிய நலம் பலகனிந்து எங்கும் இனிய யே மாய் இதம்புரிந்து கிற்பர்; அது, பெயல்மாறும் ; இவர் யாண்டும் செயல் மாருர் ; ஆதலால் அதனினும் இவர் உயர்வான அருள் கலமுடையர் என்னும் அமைதி தெரிய உவமையில் வந்தனர்.

உள்ளி என்றது நிலையாமை முதலியவற்றை கினைந்து என்றவாறு. இளமையும் கில்லா, யாக்கையும் கில்லா, வளவிய வான்பெருஞ் செல்வமும் கில்லா, புத்தேள் உலகம் புதல்வரும் தாரார், மிக்க அறமே விழுத்துனேயாவது” என மேலோர் உரைத் துள்ள உறுதிமொழிகளை உள்ளி என்க.

உள்ளல்=உள்ளத்தே ஊன்றி நினைத்தல். உள்ளலும், உவத் தலும் ஈதலுக்கு இதில் அடைகளாய் வந்துள்ள அருமை ஆாாயத் தக்கது. உத்தம வள்ளல்களின் உள்ளப் பண்புகள் உள்ளுற

இங்கே உணா கின்றன.

கிலையில்லாத செல்வம் தம் கையில் கிலைத்துள்ள பொழுதே கிலையான புகழ் புண்ணியங்களை அடைந்துகொள்ள வேண்டும் என்று கினைந்து விரைந்து ஈதலைச் செய்க என நினைவூட்டி அறி ஆட்டி நெறிகாட்டிய படியிது.

“ அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

.

அற்குப ஆங்கே செயல் (குறள் 333

‘ ‘தல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லே உயிர்க்கு (குறள் 2:1)

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிகளை உள்ளி யீயும் வள்ளியோர் என்பதுமாம். . அல்கல் = கிலேத்தல்.

ஒத்த பிறப்பினேயுடைய மக்களுள் தம்மைப் பொருளுடைய ாாக இறைவன் அருள்புரிந்து வைத்த நன்றியை கினேந்து பிறர்க்கு இாங்கி உதவும் பெற்றியாளர் என்றவாறுமாம்.

செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புரு பலவே (புறம் 189)