உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3690 கம்பன் கலை நிலை இசையைக் கேட்டு வியந்திருந்தேனே அன்றி ஈண்டு வர நான் இசைந்து கொள்ள வில்லை. இக்க அதி வீரனுடைய அதிசய நிலை யை நேரே கண்ட பின்புதான் உன்பால் அன்பு மீதார்ந்து இங்கு வர நேர்ந்தேன்” என்று தனது வரவின் உண்மையைக் கரவின்றி உரைத்திருக்கிருன். நேர்ந்துள்ளதை நேர்மையாக உரைத்திருப்பது அவனுடைய நீர்மை சீர்மைகளைக் கூர்மையா ஒர்ந்து கொள்ள வந்தது. உற்ற நிலை உலகம் கெரிய நேர்ந்தது. இத்தகைய அற்புத விரனே ஏவலாளாகப் பெற்றிருக்கிற இராமன் எத்தகைய மகிமையுடையவன யிருப்பான்? என்னும் வியப்பும் நயப்பும் ஆசையும் ஆர்வமும் விடணனே ஈர்த்து வங் துள்ளன என்று தெரிகின்றது. - -

  • ----

இராவணன் எதிரே பேசிய பொழுது அனுமானுடைய கலை ஞானங்களையும் சொல் வன்மைகளையும் அறிந்து மகிழ்க் தான்; அரக்கர்களோடு போராடி வென்று இலங்கையை எரி யூட்டி அழித்து விட்டு வீர வெற்றியோடு மீண்டு வந்துள்ளதைக் கண்டதும் மிகுந்த வியப்புகள் விளைந்தன. அதிசய விளைவு விபீ டனன் நெஞ்சில் நிலை பெற்றுள்ளமையால் அந்த ஆண்டகையி னிடம் பேரன்பும் பெரு மதிப்பும் பூண்டிருக்கிருன்.) உள்ளத்தில் உயர்ந்த மதிப்பு நிறைந்திருத்தலால் அதிசய பரவசனப் அவனே வியந்து புகழ்ந்துள்ளான். உரைகள் உண்மை ஈவிற்சிகளாய் வந்தன. உள்ளம் கனிந்து வக்க அவை அவனு டைய உயர்ச்சிகளை உறுதியாக உணர்த்தி நின்றன. ட்தான் அனுமானேக் கருதிக் கண்ட காட்சியே இராமனேக் கண்டு களித்து உய்யும்படி ஊட்டியருளியது என்று விபீடணன் ஈண்டு உரைத்திருப்பது ஊன்றி யுணர வுரியது. அனுமானே எண்ணி வருபவர் இராமனுடைய திருவருளே எளிதே அடைந்து கொள்ளுவார் என்னும் உண்மை இங்கே வெளியாயுள்ளது." -* எதிரியினுடைய நிலைகளை இராமன் வினவினன். பகையிடத் தின் திறல்களை யெல்லாம் வகையாய் உரைத்து வந்தவன் முடி வில் அனுமானது அற்புத ஆற்றல்களை அதிசய ஆர்வத்தோடு கூறி முடித்தான். அவ் வுரைகள் பலரையும் பரவசமாக்கின.