உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3708 கம்பன் கலை நிலை குசேலர் தமது மனைவியிடம் இவ்வாறு கூறியுள்ளார். இந் தக் காவியக் கவியைக் கவர்ந்து அந்த நூலாசிரியர் இந்தப் பாட லேச் செய்திருக்கிரு.ர். உலக அனுபவத்தை உண்மையாக உணர் த்தி யிருத்தலால் மனித சமுதாயத்திற்கு இது ஒரு இனிய போத னேயாய் அமைந்துள்ளது. விறகு பற்றிய கழல் போல் பொருள் சேரச் சேர மனித * - 顯 H # *H னிடம் ஆசை முறுகி எழுகிறது. அந்த மருளில் மயங்கியிருக்க லால் கன்பால் வருகின்ற எவரையும் அவன் மாறுபட எண்ணு கின்ருன். அகனல் அவனிடம் செல்பவர் அவமானமடைய நேர்கின்ருர். புல்லிய செல்வரது நிலை இவ்வாறு புன்மை மண்டி யிருத்தலால் நல்ல மானிகள் அவரை அனுகாமல் அயலே ஒதுங்கி விடுகின்றனர். பொருளிலே உலகம் இருப்பது ஆதலினல் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால் மருவினல் பொருளின் இச்சையால் இங்கன் மருவுகின் ருனெனக் கருதி வெருவுவர் என நான் அஞ்சிஎன் விடத்தும் மேவிலேன் எங்தை நீ அறிவாய்! ஒருவுமப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய்!” (அருட்பா) உலக நிலையை அ ஞ் சி இராமலிங்கசுவாமிகள் ஒதுங்கி ஒழுகி வந்துள்ள உண்மையை இங்ங்னம் உணர்த்தி யிருக்கிரு.ர். இந்தப் பெரியவரது புனித வாழ்வை துணுகி யுணர்ந்து நாம் உள்ளம் உருகுகிருேம். வைய மையலே இகழ்ந்து வெறுத்து மெய்யறிவாளர் உயப்தியை சாடி உயர்ந்து சென்றுள்ளார். மே லோர் சென்ற செந்நெறிகள் ஞாலம் உய்ய நலம்பல தந்து வரு கின்றன. உரிய அனுபவங்கள் அரிய உறுதிகளை அருளுகின்றன. பிறரிடம் ஏதேனும் ஒர் உதவியை நாடிச்சென்ருல் பெரும் பாலும் பிழையே நேரும். பொருளுடையவர் பெருந்தன்மை யாளராய்த் தரம் தெரிந்து எதையும் செய்யமாட்டார். அவரிடம் போவது தவறுடைய காம் என்னும் உறுதியுணர்வை இராமன் வாக்கால் இங்கே நன்கு உணர்ந்து கொள்ளுகின்ருேம்.