உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 37.27 சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் என இராம பாணத் தைத் தாடகை வதத்தில் குறித்தார். முதலில் குறித்த அந்தக் குறிப்பை இடங்கள் தோறும் கொடர்ந்து விளக்கி அதன் அதிசய மகிமையைக் கவி துதி செய்து வருகிருர். o தருமமே வலியது. புண்ணிய வீரனை இராமன் ஏவிய ஒரு கணை அவுனர் குழுவை ஒருங்கே அழித்து வந்துள்ளமையால் அதனை இங்க னம் தெளிந்து விளக்கினர். கொடிய பாவ காரிகள் கரிய இருட் கூட்டம் போல் கெடிது திரண்டிருந்தாலும் ஒரு சின்ன விளக் கொளியால் கடிது நீங்கிப்போம்; அது போல் இராமபாணத் தால் அசுரகுலம் ஒழிந்து போயது; அப் போக்கை உய்த்து நோக்கி உண்மையைத் தெளிந்து கொள்ளும்படி இவ் வுரை உணர்த்தி நின்றது. தனக்கு நேரே யாதொரு இடறும் செய்யாத காந்தார திவினரை இராமன் அழிக்கது கியாயமா? இது கொடிய அகி யாயம் அல்லவா? என்று சிலர் இங்கே வாதாட நேரலாம்.


(அனுமான் பேச்சைக் கேட்டு முன்னம் வாலியைக் கொன் முன். வருணன் பேச்சை கம்பி இன்று அவுணரைக் கொன்றி ருக்கின்ருன். கோளுரைக்குச் செவி சாய்ப்பவன்; கேள்விப் பேச்சைக் கேட்டுக் கேடு செய்யும் கெடு நிலையாளன்’ என்று இக் கோமகனப் பலர் படுபழி கூறும்படி அடு தொழில்கள் SSMSSSMSSS இடையிடையே கடந்து வருகின்றன. வினை முடிபுகள் யாண்டும் கினைந்து சிந்திக்கத்தக்கன. உலகில் தீமைகள் நீங்கி நன்மைகள் ஓங்கி வர வேண்டும் என்றே இராமன் ஈண்டு வந்திருக்கிருன். பயிரினங்களுக்குக் களைகளைப் போல் உயிரினங்களுக்குத் தீயவர் துயரினங்களா யுள்ளமையால் அவரைக் களைந்து ஒழிப்பதையே தனது கடமை யாக இவன் கருதியிருக்கிருன். கல்லேருழவர் பயிர்களைப் பேணி வருதல் போல் இந்த வில்லேருழவன் உயிர்களைப் பேணி வருத வால் பொல்லாதவர்களைக் காண சேர்ந்த போது ஒல்லையில் உருத்து ஒழித்து நீக்குகிருன். துன்ப ஒழிவு இன்ப விளைவாயுளது. . -ா