பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3730 கம்பன் கலே நிலை இரத்தில் அணை கட்டும் வேலை நடந்தது. பல இடங்களிலுமிருந்து மலைகளையும் மரங்களையும் வாரிக் கொண்டு வந்து வானரப் படை கள் குவித்தன. சேனைக் கலைவர்கள் எல்லாரும் தங்கள் படை களை ஏவி வேலையை விரைந்து செய்யும்படி இடங்கள்கோ.லும் தொடர்ந்து தாண்டிப் படர்ந்து கின்றனர். காஅ பேரைக் தவிர அங்கிருந்தவர் யாவரும் வினையில் மூண்டு வேலைகள் செய்தனர். இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும் அளவறு கங்குலத்து அரசும் அல்லவர் வளைதரு கருங்கடல் அடைக்க வம்மெனத் தளமலி சேனையைச் சாம்பன் சாற்றின்ை. - கடலினை அடைக்கப் படைகள் வரும்படி சாம்பவான், பறைசாற்றிக் கூறியிருக்கும் நிலையினை இக் கவிப்ப்டம் தெளி வாகக் காட்டியுள்ளது. இராமன் இலக்குவன் விபீடணன் சுக் இரீவன் ஆகிய இந்த நான்கு பேர் நீங்கலாக மற்றுள்ளவர் எல் லாரும் அணைகோலும் வேலையில் ஆரவாரமாய் மூண்டு எ வ்வழி யும் திரமாய் வேலை செய்தனர். வேண்டிய சாதனங்களை விரை க்க கொண்டு. வந்து. வானரங்கள் சேர்த்த காட்சி யாண்டும் அதிசய மாட்சியா யிருந்தது. o கருவரை காதங்கள் கணக்கி லாதன இருகையில் தோள்களில் சென்னி ஏந்தின ஒருகடல் அடைக்கமற்று ஒழிந்த வேலைகள் வருவன வாமென வந்த வானரம். (1) பேர்த்தன மலேசில பேர்க்கப் பேர்க்க கின்று ஈர்த்தன. சிலசில சென்னி ஏந்தின துார்த்தன. சிலசில துார்க்கத் துார்க்க கின்று ஆர்த்தன. சிலசில ஆடிப் பாடின. (2) காவிடை ஒருமலை உருட்டிக் கைகளின் மேலிடை மலையினை வாங்கி விண்தொடும் சூலிடை மழைமுகில் சூழ்ந்து சுற்றிய வாலிடை ஒருமலை ஈர்த்து வந்தவால். (3). முடுக்கினன் தருகென மூன்று கோடியர் -- எடுக்கினும் அம்மலே ஒருகை ஏந்தியிட்டு