பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன் 3773 படைநிலையைக் காவுடன் கண்டு வரச் சென்றவர் படு துயரங்களைக் கண்டு வந்திருப்பினும் உற்றதையெல்லாம் கொற் றவன் உணர்ந்து கொள்ளும்படி முற்றவும் துணிந்து சொன்னுர்.

  • * 'ராஜேசுவரா பாசறையை அடைந்தோம்; அளவிடலரிய நிலையில் படைகள் வந்துள்ளன; கெடிய அலைகடலைக் கருடன்

பறந்து கண்டதுபோல் நாங்கள் இருவரும். அந்தச் சேனைக் கடலைக் கடிது விரைந்து பார்த்தோம்; யாண்டும் முடிவு காண வில்லை; கரந்து நாடிவருங்கால் தேவரீரது அருமைக் கம்பியார் எம்மைக் கண்டு பிடித்துக் குரங்குகளிடம் கொடுத்தார். அந்தப் பொல்லாத வானரங்கள் எம்மைக் கொல்லாமல் கொன்றனர். அல்லல்பல செய்த முடிவில் அவரது தலைவன்பால் ஈர்த்துச் சென்றனர். பண்டு மறைந்து அமுது உண்ட அசுர இனத் திரு மாலிடம் காட்டியது போல் உங்கள் தம்பி எங்களை இராம னிடம் காட்டி இவர் அரக்கர்’ என்று வெளிப்படுத்தினர். பேரழக னை அவர் இாக்கம் மிகவுடையராப் எங்களை இனிது நோக்கி ஆதரவு கூறி உறுதிமொழிகள் பல உர்ைத்தருளினர். கரங்து சென்று நாங்கள் அறிய முடியாகன எல்லாம் அவர் வாயப் மொழியால் கெரிய வங்கன: இலங்கை ஆட்சியை இளையவ னுக்கு வழங்கியிருக்கிறேன்; மூத்தவன் உடனே விலகிவிட வேண் டும்; இல்லையால்ை இதோ உள்ள பானங்களால் அரக்கர் குலம் முழுவதும் பாழாம்’ என இன்னவாறு அவர் கூறிய மொழிகள் விரிய ஒளிகளாப் விளங்கி நின்றன. அவற்றை யெல்லாம் ஈண்டு நோே கூற எங்கள் நெஞ்சங்கள் அஞ்சுகின்றன. அவ ரது பெருங் கருணையே நாங்கள் இங்கே உயிரோடு திரும்பிவரும் படி செப்தது. இதுதான் சாங்கள் ஒற்றராய்ப் போய் உணர் ”என்று அவர் உரைத்து நின்ருர். . . -- - ங்து வந்த உண்மை - o, பகைப்படையின் உளவுகண்டு வரும்படி தான் அனுப்பி வைத்த உளவர் இருவரும் இவ்வாறு விளைவின் விரித்துக் கூற வே இராவணன் கடுத்துச் சிரித்தான். மூண்டு. வந்துள்ள அபாயங்களை நீண்டு சிந்தித்து வேண்டிய உபாயங்களை விரை க்து ஆராய்க்கான். மீண்டும் மந்திரிகள் கூடினர். ஆலோசனை கள் கடந்தன. கிலேமைகளை நினைத்து பலரும் பேசினர்.