உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3812 கம்பன் கலை நிலை மொழிந்திருக்கிருன். நோயுழந்து நொந்து பதைத்திருத்தலே வாய்மொழி நன்கு வெளிப்படுத்தியுள்ளது. என்னை நீயே கொன் ருய் என்றதில் எவ்வளவு துன்பங்கள் கோப்ந்திருக்கின்றன? எத்தன்ே பொருள்கள் அடங்கியுள்ளன; உய்த்துணர வேண்டும். சுக்கிரீவன் அரக்கர்பதியால் அழிந்து போனல் இராமன் வாழ்வு அடியோடு பாழாயது என முடிவு செய்திருக்கிருன். o El N களிலிருந்து உள்ளமுடிவுகளை ஒர்ந்து உணர்ந்துகொள் கிருேம். கொடிய துயரம் உயிரை கெடிது கலக்கி யிருக்கிறது. உற்ற துணைவன் மாய்ந்தால் உரிய மனைவியை மீட்டாமல் கன் உயிரை மாப்த்து மாண்டு போக வேண்டும் என்று இந்த ஆண்டகை மூண்டு முனைந்துள்ளதை மொழிகள் வெளி செப் துள்ளது. மனவேதனை மரண வேதனையை மிஞ்சி கின்றது. நட்பாய் அடைந்த நண்பனை இழந்தபின் உயிர்வாழ்ந்திருப் பது இழிந்தபுன்மை என எண்ணி ஏங்கி யிருக்கிருன். கன்னே அடைந்தவரை எவ்வழியும் இனிது ஆகரிக்கும் இயல்பினன் ஆதலால் இவ்வழி உடைந்து உளைந்து இனங்து மறுகினன். - * - அரிய பல காரியங்களை முடித்துப் பெரிய மகிமையோடு வாழவுரிய தனது இனிய வாழ்வு பாழாய்ப் பழி அடையும்படி அவனுடைய தொழில் செப்துவிட்டதுஎன இக் குலமகன் குலை துடித்துள்ளான். நெஞ்சத் துடிப்புகள் நெடிய துயரங்களாயின. காரியக்கேடும் கொடிய அவமானமும் நேர்ந்தனவே! என்று நெஞ்சம் கலங்கி கெடிது புலம்பி முடிவுதெரியாமல் தத் தளித்துத் கவித்து இவ் வுத்தமன் உளேந்து கின்ருன். ■ ஒன்ருக கினேய ஒன்ருய் விளேந்தது என் கருமம். -- தன் விதியை கொக்து இவ்வாறு மதிமயங்கி யிருக்கிருன். சுக்கிரீவன் தக்கதுணையாய் அமைந்திருக்கிருன்; அழுபது வெள்ளம் சேனைகள் சேர்ந்துள்ளன. இந்தத்துணைவலியில் பகையை எளிதே வென்று மனைவியை மீட்டிமாண்பு பெறலாம் என இன்னவாறு உன்னி உவந்து கின்ருன்; அந்த நிலையில் i இந்த அவலம் நேர்ந்தது ஆதலால் தன் மனக்கோட்டையெல் லாம் அடியோடு தகர்ந்து போயது என உள்ளம் உடைந்து புலம்பி யுள்ளான். வினை விளைவை கினைந்து வேதனை விரிந்தது.