உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3894 கம்பன் கலை நிலை அரிய ஒரு கலைத் தொழிலாப்க் காட்சி புரிந்தது. வில்லிலிருந்து விரிந்து விரைந்த பகழிகள் யானே கேர் முதலிய நால்வகைச் சேனைகளையும் சாசப்படுத்தி நான்கு திசைகளிலும் பாய்ந்தன. தேரெலாம் துமிந்த மாவின் திறமெலாம் துமிந்த செங்கட் காரேலாம் துமிந்த வீரர் கழலெலாம் துமிந்த கண்டத் தாரெலாம் துமிந்த நின்ற தனுவெலாம் துமிந்த தத்தம் போரெலாம் துமிந்த கொண்ட புகழெலாம் துமிந்து போய. [1] அரவியல் தறுகண் வன்தாள் ஆள்விழ ஆழ்மேல் விழப் புரவி மேல் பூட்கை விழப் பூட்கைமேல் பொலன்தேர் விழ கிரவிய தேரின் தன்மேல் நெடுந்தலே கிடந்த நெய்த்தோர் விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது விழ. [2] கடுப்பின்கண் அமர ரேயும் கார்முகத் தம்பு கையால் தொடுக்கின்ருன்துரக்கின்ருன்என்றுஉணர்ந்திலர் துரந்தவாளி இடுக்கொன்றும்காணுர்காண்பதுஎய்தகோல்நொய்தின் எய்திப் படுக்கின்ற பிணத்தின் பம்மற் குப்பையின் பரப்பே பல்கால்.(3) கொற்றவாள் கொலைவேல் சூலம் கொடுஞ்சிலை முதலவாய வெற்றிவெம் படைகள் யாவும் வெந்தொழிலரக்கர் மேற்கொண்டு உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூாருய் அற்றன. அன்றி ஒன்றும் அரு தன இல்லே யன்றே. [4] சாய்ந்தது கிருதர் தானே தமர்தலே இடறித் தள்ளுற்று ஒய்ந்தன ஒழிந்த ஒடி உலந்தன வாக வன்றே வேய்ந்தது வாகை விரற்கு இளேயவன் வரிவில் வெம்பிக் காய்ந்ததன் விலங்கை வேந்தன் மனமெனும் காலச் செந்தி. (5) இளைய பெருமாளுடைய விரப் போர் நிலைகளை இவை விளக்கியுள்ளன. அரக்கர் ஏவிய கொலைக் கருவிகளை யெல்லாம் குலைத்து விலக்கி யாவரும் நிலத்தில் விழ்ந்து மடிய நிலையாகச் சிலையாடல் புரிந்திருக்கிருன். சேனைத்திரள்கள் சின்னபின்ன மாய்ச் சீரழிந்து சிதைந்து யாண்டும் மாண்டிருக்கின்றன. இளையவன் வரிவில் வாகை வேய்ந்தது. இலக்குவனுடைய வெற்றி நிலையை உணர்த்தியுள்ள இது ஈண்டு உய்த்துணர வுரியது. வாகை = வெற்றி. இலக்குவன் வெற்றி பெற்ருன் என்னுமல் வில் வாகை வேய்ந்தது என்றது அதன் தெய்வீக நிலையை வியந்து விழைந்து காண வந்தது.