உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3625 அரிய ஆலோசனைகளோடு அறிவாளிகள் பலர் பேசினர்; கருமக் காட்சிகள் உரிமையோடு விளக்கப்பட்டன. காரிய விசாரணைகள் சீரிய வாதங்களாப்ச் செறிந்து நிகழ்ந்தன. அதி அ ட' மதிமானை அனுமான் பேசி முடிக்கயின் இறுதியில் தன் உள்ளக் கருக்கை அறுதியிட்டு இராமன் பேசி யிருக்கிருன். அந்த வாக்கிய அமுகங்களை நோக்கி நுகர்கிருேம். துதி யிழை மதியில் விளைந்துள்ள விளைவுகள் அதிசய மகிழ்வா விரிந்துள்ளன. தன்னைப் புடைசூழ்ந்து பரந்திருக்க சிறந்த வானரத் கலை வர்களை நோக்கி இம்மான விரன் உரையாடி யிருக்கும் கம்பீர நிலைகளை மானசவிழிகளால் கானும் பொழுது உணர்ச்சி வெள் ளமான பேரின்பக் காட்சிகள் நேரே பெருகிக் கோன்றுகின் றன. அகத்தே கருதிக் கண்ட அந்த அறிவுக்காட்சிகளைப் புறத் தே முழுதும் தெளிவாகச் சொல்ல முடியாமையால் இயன்ற அளவு அறிஞர் இயம்ப நேர்கின்றனர். கான் சொக்கமாய்க் கண்டு சகிப்பதே வான் கண்ட சுகமாப் மருவியுள்ளது. இராமன் பேசியது. அனுமான் கூறிய மதுரமான அறிவுமொழிகளே இனிது செவிமாங்திய இராமன் பெரிதும் மகிழ்ந்தான். உறுதியுரிமை களை யுவந்தான். அதன்பின் சபையினரை நோக்கி நேரே பேச நேர்ந்தான். மெய்யன்பர்களே! இங்கே அடைக்கலம் புகவங் துள்ள விடணனேக் குறித்து உங்கள் கருத்துக்களைத் தெளி வாகத் தெரிவித்தீர்கள், யாவும் தெரிய வந்தன. வந்துள்ளவ னது நிலைமை நீர்மைகளை நினைந்து கோக்கின் எவ்வழியும் நல்ல வன் என்றே தெரிகின்றது. றிவு சீலம் கவம் முதலிய உயர் நலங்களை யுடையவன் என்பது நம்மை உரிமையாக நாடிவந்திரு க்கும் இந்த ஒன்றினலேயே நன்கு புலகிைன்றது. கம் இயல்புக் குத்தக்கபடியே எவரும் எங்கும் உறவு கொள்ள நேர்கின்றனர். காலம் இடம் வலி முதலிய நிலைமைகளை யெல்லாம் கருதியுனர்க் தே உறுதியை நாடி இவன் ஈண்டு அடைந்திருக்கிருன். அண் ணன் மீது வெறுப்பிருந்தால் வேறே எங்கேனும் துறவியாப்ப் போப் விடலாமே, இங்கே நம்பக்கல் வருவானேன்? என்று நீங்கள் ஐயுறவு கொள்ளுகிறீர்கள். அவ்வாறு ஐயமுறலாகாது. இவன் நெஞ்சில் யாதொரு வஞ்சகமும் இல்லை. கமையனுக்கு 454