உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 3641 நண்பராயப் ஈண்டு மருவியுள்ள இருவரது மாட்சிகளை விளக்க இரண்டு அடிகள் முன்னே மூண்டு வந்தன. - ஆண்டுகள் பலவாக ஒன்ருக் கூடி அளவளாவி யிருக்கா லும் உள்ளம் தியவர் உறவாப் கேரார்; ஒரு நாள் காணினும் நெஞ்சம் தாயவர் நேயம் மீதார்த்து நேரே கலந்து நிலையான நண்பராயப் நிலவி நிற்பர் என்றது. இங்கே நேர்ந்துள்ள நண்பின் நிலைமையை நினைந்து தெளிய. நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. (33) ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருகிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. (நறுக்தொகை) இந்த இரண்டு பாவும் நம் கவியின் முதல் இரண்டு அடி களைக் கருதி வந்தன போல் கானப் படுகின்றன." கேண்மை யின் நிலைமையும் நீர்மையும் தலைமை கோன்ற வங்கன. செல்வுழிக் கண் ஒருநாள் கானினும் சான்றவர் தொல் வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்தியாப்பர்.” (நாலடியார், 154) வழியில் கண்ட இடத்தில் ஒரு நாள் பழகினும் விழுமி யோர் கெழுமிய நண்பராய்க் கேண்மை புரிந்து பான்மை சுரந்து நிற்பர் என இது குறித்துள்ளது. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலே பயங்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினும் தொடைபுணர்ந்து அருவிலே நன்கலம் அமைக்கும் காலே ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்ருேர் சான்ருேர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலரை குபவே. (ւկAoւք, 218) பொன் மணி முத்து பவளம் முகவிய அரிய பொருள்கள் மலை கடல் நிலம் என அயலான வேறு வேறு இடங்களில் பிறக் திருக்காலும் அணிகலமாகும் பொழுது ஒரே இனமாய்த் தோன்றி எழில் விசி நிற்றல் போல் மேலோர்கள் இடம் குலம் முகலியவற்ருல் வேறு பட்டிருக்காலும் நேரே மருவிய போது 456