உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3643 "என்றனர் இரங்க மேலோன் எதிர்தழி இத் தழுவி ஆறி குன்றனிர் சிறியற் காகக் குழைந்தழல் தமியேன் செல்வல் பொன்றலில் நட்பினுக்குப் புணர்வொடு பழகல் வேண்டா; கின்றால் லுணர்ச்சி தானே கிறைக்குமென்று உணர்ந்தகல்லீர். (சிகாளத்திப் புராணம்) தமது பிரிவுக்காக இரங்கி வருந்திய சங்கப் புலவர்களை நோக்கி நக்கீரர் கூறிய படியிது. (சாயனர் வாய்மொழிகளைக் கவிகள் இவ்வாறு கவர்ந்து கொண்டு உவந்து போற்றி வந்துள் ள்ேனர். உள்ளப் பண்பும் உணர்ச்சியும் ஒத்தவர் உரிமை நண்ப ராப் மருவி மகிழ்வர் என்பது விடன சுக்கிரீவர்களால் இங்கே விளங்கி நின்றது.

    • Similitude of disposition made them perfect friends.**

[Goldsimith] 'ஒத்த பண்பு அவரை உயர்ந்த நண்பராக்கியது” என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈண்டு ஊன்றி யுனா வுரியது. ஆல்காண்டர் (Aleander) என்பவன் கிரீஸ் தேசத்தவன்; செப்டிமியஸ் (Septimius) என்பவன் ரோமாபுரியினன். இருவரும் முன் தொடர்பு இல்லாதவர். இடையே சந்தித்தனர்; அளவளா வினர்; உழுவலன்புடையராப் அரிய நண்பராயினர். அந்த நட் பின் நிலைமையைக் குறித்து கோல்ட்ஸ்மித் என்னும் ஆங்கிலப் புலவர் இவ்வாறு உ ரைத்திருக்கிருர். புணர்ச்சி பழகுதல்கள் இல்லாதிருப்பினும் உணர்ச்சி ஒத்திருந்தால் அது நட்பாம் கிழமை தரும் என்ற கேவர் வாக்கை இது ஒத்து வந்திருப்பது வியப்பா யுள்ளது. கால தேசங்களால் பிரிந்திருப்பினும் மனிதரது நித்திய நீர்மைகள் எவ்வழியும் ஒரு முகமாய் ஒத்திருக்கும் என்பதை இதல்ை உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம்.) உணர்வு ஒன்றி இவ்வாறு கிழமை மீதுார்ந்து தழுவி நின்ற சுக்கிரீவன் விபீடணனை இனிது நோக்கி ஆண்டவன் உங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பியருளினன்; விரைந்து போவோம்; வாருங்கள்’ என்று அன்புரிமையோடு உரைத் தான். அந்த உரையைக் கேட்டதும் இலங்கைக் கம்பி உள்ளம் உருகினன், கண்ணிர் பெருகியது; ஆனந்த பரவசனப் அயர்ந்து கின்ருன். பின்பு பல பல கினைந்து பரிந்து மொழிந்தான். உள்ளங்