உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3658 கம்பன் கலை நிலை ளல் உள்ளம் உருகி உள்ளான். அவ்வுண்மை அருள் சுரந்து என்ற கல்ை அறிய வந்தது. கன் தம்பியரைக் கண்ணினும் உயிரினும் இனியராக் கருதி ஒழுகி வருகிற விழுமிய புண்ணிய மூர்த்தி ஆதலால் அயலே ஒர் அண்ணன் தன்னுடைய கம்பியை இன்னல் செய்து இழித்துக் தள்ளியது பெரிய இரக்கத்தை விளைத்தது. கனது இயல்பின் படியே அயலே விழைந்து காண்பது மனித சுபாவமாய் மருவியுள் ளமையால் அம்மருமம்கருமநீர்மையாய் இங்கே கனிந்கெழுந்தது. . . தம்பிமாரை வெறுத்து அல்லல் செய்கிற கமையன்மார்களை வேரஅத்து ஒழித்து அக்க அனுசர்களை ஆரருளுடன் புரந்து வரு வதை இவ் விர வள்ளலிடம் யாண்டும் விழைந்து கண்டு வருகி ருேம். இனிய ஆதரவுகள் அரிய நீர்மைகளாயுள்ளன. உற்ற துணைவனுக்கு ஊறு செய்த வாலியை ஒழித்துக் கிட் கிங்தா ராச்சியத்தை முன்னம் சுக்கிரீவனுக்கு அருளினன்; இங்கே இராவணனை அழித்து ஒழிக்கு முன்னமே இலங்கா ராச்சியத்தை விபீடணனுக்கு வீரதானமாய் வழங்கி யுள்ளான் உள்ளதை உவந்து தருபவர் வள்ளல்கள் என இசையோடு வளர்ந்து வந்துள்ளனர். கன்பால் இல்லாததையும் எதிர்நோக்கி அளித்துள்ளமையால் வீர வள்ளல் என விண்னும் மண்னும் வியந்து புகழ இக் கீரன் ஈண்டு விளங்கி நிற்கின்ருன். வீரக் கொடை எதிரி பெரிய போர்வீரன். அரிய பல படைவலிகளையுடை யவன். அப்படியிருந்தும் இராவணனை ஒருபொருளாக எண் மைல் அவனது அரசுரிமையை முன்னதாகவே தம்பிக்கு இக் கம்பி தானம் செய்திருக்கிருன். வெற்றியில் எவ்வளவு நிச்சயம் இருந்தால் இக் கொற்றக் குரிசில் இவ்வாறு கூறியிருக்க முடி யும்? இந்த விரப்பாடு வியப்பு மிக வுடையது. பகைவனை வென்று கொள்ளு முன்னரே அவனுடைய காடு உன்னுடையதே எனத் தன்பால் வந்தவனுக்கு இவன் அன்பால் அளித்திருக்கிருன். இதில் வீரமும் கொடையும் களி கடம் புரிந்துள்ளதை நாம் களித்துக் காண்கின்ருேம்.