பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4060 கம்பன் கலை நிலை தேவரும் நேரே பக்கம் கின்று கானுவர். போரில் நேர்ந்தவர் பாரில் வீழ்ந்து மாள்வரேயன்றி என் நேரில் எதிர்ந்து நில்லார். அவ்வாறு விருேடு போராடவந்துள்ள என்னை நீ மாருய் அழை க்க வந்துள்ளாய் கூற்றுவனும் அஞ்ச வாழ்ந்துவந்த நான் மாற்ருனேடு சேர்ந்து கெஞ்சி வாழ்வேனே? எனது மனநிலை யை உணர்ந்து உனது மனநிலையை மாற்றிக் கொள்ளுக. ஒரு வேளை வெல்லமுடியாமல் நாங்கள் எல்லோரும் மாண்டுமடிந்து போனல் நீ மீண்டுவந்து எங்களுக்கு எள்ளும் தண்ணிரும் இறைத்துச் சரமக்கிரியைகள் செய்து போகலாம். சாவாாை பிழைப்பிப்பாரும் வாழ்வாரை அழிப்பாரும் யாண்டும் இல்லை. ஆங்காலத்தில் யாவும் ஆகும்; போங்காலத்தில் எல்லாம்போ கும்; வினையின்வழியே எவையும் நடந்து வருகின்றன. அழிவை கினேந்து அஞ்சுவதும் ஆவதை விழைந்து களிப்பதும் அறிவிலி கள் செயலாம். மாண்டுபடினும் மானம் பேணி வீரம். காத்து நிற்பதே யாண்டும் குலவிரர்களுடைய இயல்பாம். கலேமை யான வீரக்குடியில் பிறந்த எனது நிலைமையைகினைத்து திருத்துக; எனக்காக ஈண்டு வருந்தி நில்லாதே; விரைந்து போய் விடுக!” என்று தம்பியை நோக்கிக் கும்பகருணன் இவ்வாறு பரிந்து கூறிக் கெழுதகைமையோடு தழுவி விழிநீர் சொரிந்து நின்ருன். அருந்திறலாண்மைகளோடு பொங்கி வந்துள்ள இந்த உரைகளிலிருந்து அவனுடைய உள்ளக்கையும் உணர்ச்சிகளை யும் நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். பேசிவரும்போதே விர கம்பீரங்கள் வீறிட்டு வெளிவந்துள்ளன. தமையன் நீதிக்கேடு செய்து நெடுந்துயரங்களை விளைத்து விட்டான் என்று நெஞ்சம் கொங்திருந்தாலும் அவன்பால் வைத்துள்ள அன்பும் மதிப்பும் குன்றவில்லை. குலமானம் நெஞ்சில் குடிகொண்டு நிற்கின்றது. (எதிரியைப் பெரியவன் என்று கருதி வியந்தாலும் அவனை அடை க்து உயிர்வாழ்வது கொடியபழி என்று கடிது இகழ்ந்திருக்கி முன். மானம் அழிந்து வாழ்வது ஈனம் என முடிவுசெய்துள் ளான். உயிர் வாழ்க்கையைத் திரணமாக எண்ணியிருத்தலால் இவனுடைய விரவாழ்க்கையின் நிலைமைதலைமைகளை நேரே தெரி க்து வியந்து உவந்து வருகிருேம். உள்ளத்தில் புதைந்து கிடந்த உண்மைகள் காலம் நேர்ந்த போது ஞாலம் அறிய வெளிவந் துள்ளன. உரைகளுள் உணர்வுகலங்கள் ஒளிபுரிந்து நிற்கின்றன.