பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4, 106 கம்பன் கலை நிலை கரையில் வீழ்த்தவில்லையானல் உனக்கு நான் தோற்றவனேயா வன்; இனிமேல் யாண்டும் நான் வில்லே பிடிப்பதில்லை” என்று இவ் வில் விரன் சொல்லியுள்ள இதில் உள்ளத்திறலும் உறுதி கிலையும் ஒளி செய்து கிற்கின்றன. உரைகளில் பொதிக் துள்ள வீரச் சுவைகள் வியத்து நுகர வுரியன. : -- எவர்க்கும் அச்சம் தோன்றும்படி அவன் ஆங்காரமாய்ப் பேசியதைக் கேட்ட போது இவன் புன்னகை செய்துள்ளான். அக் நிலைமையை முறுவலித்து என்னும் குறிப்பால் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். இந்த இளஞ்சிரிப்பு இகழ்ச்சிக் குறிப் போடு விர ச் செருக்கையும் நேரே விளக்கி நிற்கிறது. தான் விரைந்து இறந்துபட நேர்ந்து நின்.அறும் இவ்வளவு தைரியமாப்ப் பேசுகின்ருனே! என்ற வியப்பு நகைப்போடு =து வெளி வந்துள்ளது. அந்த நகை அதிசய முடையது. தன் கையில் அகப்பட்டவனே மீட்ட முடியாது என்று அவன் விம்பு காட்டி நீட்டினன். பிடிபட்ட துணைவனை மீட்டுவ தோடு பிடித்த தோள்களையும் துணித்து விழ்த்துவேன் என்று இவன் விர சபதம் கூறினன். கூற்றின் ஏற்றம் கூர்த்து காண்க. இவ்வாறு விரவாதங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே கையில் சிக்கியிருந்த சுக்கிரீவனைக் கசக்கிக் கொல்ல அவன் கடுத்து முயன்ருன்; அந்தக் கொடுமையை உணர்க்க இவன் கடுமையாக அம்பு தொடுத்தான். ஏவிய பாணங்கள் அவனு டைய நெற்றியில் பாய்ந்து வேகமாய் ஊடுருவிப் போயின. போகவே இரத்தங்கள் பொங்கிப் பாய்ந்து முகத்தில் வழித்து ஒடியன. குருதி நீர் பெருகி மார்பில் வழியவே பிணித்திருக்க கைகள் சிறிது தளர்ந்தன. தளரவே மயங்கியிருந்த சுக்கிரீவன் மயக்கம் தெளிந்து மெல்ல விழித்தான். அயலே நோக்கினன்; இராமனைக் கண்டான்; உள்ளம் நாணினன்; மேலே துள்ளி எழுந்து கும்ப கருணன் மூக்கை வாயால் கவ்வின்ை; காதுகள் இர ண்டையும் கைகளால் பற்றினன்; விரைந்து கடித்து வெகுண்டு பறித்து லகுபாய்ந்து தாவி வந்து சேனைத் திரளுள் சேர்ந்தான். சுக்கிரீவன் மீண்டு வந்ததைக் கண்டதும் உக்கிரவீர மாய் உருத்து நின்றவன் உள்ளத்தே பேரானந்தம் அடைந்தான்.