பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮞ170 கம்பன் கலை நிலை மும் உடைய நீ பழியும் துன்பமும் அடைய நேர்ந்தாய் என்.ஆ. இவ்வாறு பரிதபித்துமறுகிஉருகி அவலமாய் அலமரலடைந்தாள். பற்றுண்ட நாளே மாளாப் பாவியேன். என்றது. பஞ்சவடியில் வந்து இராவணன் வஞ்சமாய்த் தன்னே வவ்வியபோதே இறந்து போயிருக்க வேண்டும்; அவ் வாறு அங்கே சாகாமல் இருந்தகனுலே தான் இவ்வாறு எல்லார் க்கும் பிழையான துயரங்கள் வந்தன என்று உள்ளம் நொந்து உயிர் பதைக்க நேர்ந்தாள். பல நிலைகளையும் நினைந்து இக் குல ம்கள் பரிதபித்துக்குலைதடித்துள்ளது.உரைகளில் தெரியகின்றது. சிறந்த புகழோடு வாழ்ந்து வந்த உயர்ந்த அரச குடும்பம் தன்னல் இழிக்க பழிகளை அடைந்ததே! என்று வருந்திகைக் காள்; 'பிறந்தகுடியும் புகுந்த இடமும் பெருமகிமைகளை யுடையன. அவை இரண்டையும் நான் ஒருத்தி பிறந்து சிறுமைப் படுத்திச் சீரழித்து விட்டேனே! என்று சிங்கை துடித்திருக்கிருள். அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்தம் புகழை அம்மா! என்று வருந்தி கொந்திருக்கலால் அந்த நெஞ்சப் பதைப்பு களின் கிலைகளை உணர்ந்து கொள்கிருேம். விரத வேடம் பூண்டு அண்ணனேயே கருதி மறுகி உருகி யுள்ள பரதனையும் இந்தக் கொடிய பாதகன் ஏதேனும் செய்து விடுவானே! என்று நெஞ் சம் பதைத்துகுெடிய துயரங்களே அடைந்துகொடியபரிதாபமாய்ச் சீதை பதறிக் கதறியிருக்கிருள். இந்தப் பதிவிரசையின் உள்ளத் துடிப்புகள் சொல்ல முடியாத சோகங்கள்ாப் எல்லைமீறி எழு ங்துள்ளன. இவளது அல்லல் நிலைகளைக் கண்டு இராவணன் உள்ளம் உவந்தான். உறுதி சூழ்ந்து உரையாட நேர்ந்தான். துர்த்தன் துணிந்து வார்த்தையாடினன். தான் செய்த மாயச்சூழ்ச்சியால் காரியம் சித்தியாய் விடும் என்று இராவணன் பெரிதும் கருதிப் பேராசை மீதுார்ந்து மகிழ்ந்தான்.க்ேகை பிடிபட்டு வந்துள்ளான் என்று சிங்தை துடித்துச் செயலிழந்து பதைக்கின்ருள் ஆதலால் இவளை இப் பொழுகே வசப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவ்வஞ்ச கன் நெஞ்சம் துணிக்கான். துயரத்தியில் வீழ்ந்து உயிர்கருகிப் பரிதாப நிலையில் மறுகித்துடிக்கின்ற இப்பத்தினி அருகே வந்து