பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4209 இலங்கை வேங்கன் அழுதான் என்பதை இவ்வளவு அழ காகக் கவி சுவையுடன் சொல்லியுள்ளார். அதிசய பராக்கிர மங்களையுடைய ஒரு பெரிய விர இன அழுதான் என்.று சொல்வது இழிவாம் என்று கருதி இவ்வாறு மரியாதை மொழியில் உண்மை தெரிய வுரைத்தார். உரையில் உணர்வு சுரங் தள்ளது. அவன் அவ்வாறு அண்டம் கலங்க அழுது கின்ற பொழுது சீதை உள்ளே உவகை மீக் கொண்டாள்.தன்னைத் துன்புறுத்தி அழகச் செய்த இராவணன் அழுத்ான் என்றதை எண்ணிச் சீதை சிரிக்க வில்லை; அந்தச் சிரிப்பு தனது சிங்கைத் துயரம் தீர்க்க மையால் எழுந்தது. அசோகவனத்தின் அயலே கும்பகருணன் ஒருநாள் உலாவச் சென்ருன்; அவனைச் சீதை கண்டாள்; அவனுடைய உருவ நிலையும் அடலாண்மையும் உக்கிர விரத்திற அம் இப்பதிவிரதைக்குத் திகில விளைத்தன; இத்தகைய நெடிய வடிவுடைய பெரிய போர் விரளுேடு நம் நாயகன் போராட நேருமே; யாதாய் முடியுமோ? என்று ஐயமடைந்து அகம் கலங்கினுள். அக் கலக்கம் இலக்கமாய் நேர்ந்தது. கண்டாள் கருனனைக் கொண்டாள் ஒருதுணுக்கம். அவனைக் கண்டதம், இவள் கலங்கியுள்ளதும் இதகுல் நாம் கண்டு கொள்ளுகிருேம். துணுக்கம் = அச்சம், நடுக்கம். எதிரியிடம் அமைந்துள்ள பெரிய பலத்தைக் கண்டு இவ்வாறு நெஞ்சம் அஞ்சி நடுங்கியிருந்தாள் ஆதலால் அந்த அதிசய உருவன் கோதண்டவிரல்ை அழிந்து தொலைக்கான் என்று அறியவே இக்குலமகள் உள்ளத்தில் பெரிய ஆனந்தம் உண்டாயது. அந்த ஆனந்த பரவசத்தால் உள்ளம் பூரித்து உயிர் தழைத்து உடல் செழித்தது; செழிக்கவே மெலிந்து வாடி யிருந்த சீதையின் உருவம் மிகுந்த தேசோடு விளங்கி கின்றது. கொற்றவர்ை வாளி அவனைத் தடிந்த தனிவார்த்தை உண்டாள்; உடல்தடித்தாள்; வேறு ஒருத்தி ஒக்கின்ருள். இந்தக் காட்சியைக் கண் ஊன்றி நோக்கி நிகழ்ச்சிகளை நேரே கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். அடையாளமே தெரியா மல் உருவமாறினுள் என்பார் வேறு ஒருத்தி ஒக்கின்ருள் என்ருர். 527