பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட (1Ք ೨5 ճՎ 6❍ Ꭻ • —o-o-o-o இது கம்பன் கலை நிலையுள் பதினேராவது தொகுதி. இராம பிராைேடு போராடித் தோல்வியடைந்து போன இராவணன் அரண்ம்னே புகுந்து அலமந்து இருந்தான். மாலியவான் வந்து #3%Ostotroll- அறிந்து நெஞ்சம் வருந்தின்ை. அம் முதியவன் கூறிய அறிவுரைகளையும் கேளாமல் மீண்டும் கும் பகருணனை எழுப்பிப் போருக்கு அனுப்பிவிட்டு மாயா சனகனக் கொண்டு வந்து சீதையை வஞ்சித்தான். கன்தந்தை என்று நம் பிச் சிங்தை கலங்கி அப் பதிவிர தை பகைத்தாள். முடிவில் தெளிந்து இருவ ரையும் இகழ்ந்து வெறுத்து உறுதியுண்மைகளை உரைத்தாள். அதுபொழுது கம்பி இறந்துபட்டான் என்பதை அறிந்து இரா வணன் மறுகி அழுது அரண்மனைக்கு வந்தான். அதிகாயன் போருக்கு எழுந்தான்; சேனைகளோடு சென்ற அவன் மூண்டு போராடி இறுதியில் இலக்குவனல் மாண்டு விழுந்தான். அவன் அழிந்தது தெரிந்து அவனுடைய தாய் ஆன தானியமாலை அ.மு.தி துடித்தாள். இலங்கை வேந்தனும் கலங்கி உளைந்தான்; அவனைக் தேற்றி யிருக்திவிட்டு இந்திரசித்து பெரும் படைகள் புடைசூழத் தேர் ஏறிப் போர்மேல் சென்ருன். பொருகளம் புகுந்தான்; வானாசேனைகளும் அரக்கர் திரள்களும் ஆர்த்துப் பொருதன. இந்திரசித்தும் இளையபெருமாளும் மூண்டு போர ாடினர். நீண்ட நேரம் இருவரும் வெருவரு திறலோடு வெகுண்டு பொருதும் ஒருவரும் வெல்லாமல் பருவர லடைந்தார். முடிவில் அவன் ஏறி யிருக்க தேரை உடைத்து வில்லைத் துணித்துக் கவசத்தைத் தகர் த்துக் கடுங்கனைகளைக் கடுத்துத் தொடுத்து இலக்குவன் வெற்றி மிகப் பெற்ருன்; படைகள் யாவும் இழந்து பரிதாப நிலையில் மறுகிகின்ற இந்திர சித்து ஆகாயத்தில் விரைந்து மறைந்து போனன். அங்கே கரந்து கின்று அவன் நாகபாசத்தை ஏவி ன்ை. இலக்குவன் முதல் யாவரும் மயங்கி மண்ணில் சாய்ந்த ೯. வீடணன் வருந்தினன், இராமன் வந்து அழுது தவித்துக் தம்பியைத் தழுவி உழுவலன்போடு உருகி மறுகிப் பருவரல் ஆோர்ந்து பரிந்து ’கின்று உற்றதை உசாவி உறுவதை ஒர்ந்தான். இக்கச் சரித நிலைகள் முறையே இதில் அடங்கி யிருக்கின்றன. செகவீரபாண்டியன்.