பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4267 ஒம்பித் திரிந்தேற்ரு இனியின் அறு உதவாதுபோமேல் சோம்பித் துறப்ப்ேன் உயிர் சோஅம் உகந்துவாழேன். (4) மருந்தேகிகர் எம்பிதன் ஆருயிர் வெளவினனே விருந்தேஎன அந்தகற்கு ஈகிலன் வில்லும்ஏந்திப் பெருந்தேவர் குழாம்ாகை செய்திடப் பேர்க்கு பாரில் இருந்தேன். எனின் நான் அவ் இராவணி அல்லன் என்ருன். இந்திரசித்து பேசியுள்ள சூளுரைகளே இவை காட்டியுள் ளன. இவ்வுரைகளால் அவனுடைய உள்ளத் திமிரும் உறுதி நிலைகளும் உணரலாகும். எவ்வழியும் வெற்றியாளனப் விற கொண்டு வாழ்ந்துவந்தவன் ஆதலால் ஈண்டு இவ்வாறு விரவா தங்கள் கூற நேர்ந்தான். 'தந்தாய்! இனி இங்கே கின்று விணே உஆளந்து புலம்பிக்கொண்டிருப்பது பிழை; என் கம்பியைக் கொன்று தொலைத்த அந்தச் சின்ன மனிதனைப் பதைக்கவதைத்து அவன் உயிரை வாங்கி உடலைக் கழுகு பருந்துகளுக்கு இரை யிட்டு விரைவில் வருவேன்; போர்க்களத்தில் அவனே க் கொன்.று தரையில் உருட்டிலைன்றி இலங்கைக்கு நான் மீண்டுவருவ தில்லை; உயிர் வாழ்க்கையும் வேண்டேன்; அவனுக்குத் துணை யாக வந்துள்ள படைகளையெல்லாம் அடியோடு அழித்து எனது குடிக்கு நேர்ந்த பழியைத் தீர்த்தபொழுதுதான் நான் இங்கே பிறந்த பயனைப் பெற்றவன் ஆவேன்; தேவராசனை இந்திரனை வென்று எங்கும் இசை பொங்க இன்பம் மீதுார்ந்து இனிது வாழ்ந்துவந்த எனது வாழ்வெல்லாம் கம்பியை இழந்த இந்த ஒர் இழிவால் பேரிழவாய் அழிவடைய சேர்ந்தன. நேர்ந்த இப் பழியை விரைந்து துடைத்து வென்றி விருேடு நான் மீளவில்லை யானுல் முன்பு பெற்றிருந்த வெற்றிப்புகழ் எல்லாம் பாழாப் அழிந்துபோகட்டும்; இந்திரனுக்கும் நான் இழிந்து தோற்றவன் ஆகட்டும்; திருமால் முதலிய தேவதேவர் யாவரும் சிரிக்கட்டும். சங்திரசூட சடாகாரியாகிய சிவபெருமான் எனக்கு உரிமை யோடு அருளியுள்ள பாசுபதம் என் கையில் இருக்க எனது தம் பியை இழந்து வினே நான் இங்கே இருக்கலாமா? அரிய சிறப் புடைய அ.து உரிய வெற்றியை உதவாது ஒழியின் என் உயிரை உடனே ஒழித்துவிடுவேன். மதிப்பும் மாண்பும் மானமும் வீர மும் இழந்தபின் வாழ்வது ஈனமேயாம். என் கம்பியை அழித்த அந்த இலக்குவன் உயிரைக் காலனுக்கு அளித்து வெற்றித்திரு