பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4308 கம்பன் கலை நிலை உயர்வையும், அதனை அறவே மாற்றிவிட்டுப்புதிதாய் ஏற்றுள்ள நிலையையும் எ ண் ணி நோக்குவார் இப்புண்ணியத்தம்பியின் புனிதநீர்மையையும் சகோதரவாஞ்சையையும் கருதியுருகுவார். -உறக்கமும் மாற்றின்ை. இது எவ்வளவு பெரிய அதிசயம்! யாவரும் மாற்ற முடியாகதை இக்குலமகன் கனியே மாற்றியிருக்கிருன். இந்த அரிய விரதத் தை மேற்கொண்டது எதற்காக? எல்லாம் அண்ணனை இனிது காக்கவேயாம். அந்தப் பாதுகாவலில் கண் விழிப்பு விண் விழிப் பாப் நின்றது. - கங்கைக் கரையில் அண்ணனும் அண்ணியும் உறங்கும் போது இந்தத் தம்பி வில்லை ஊன்றியகையோடு இரவு முழுவதும் விழித்துப் பாதுகாத்து கின்றது காவிய வுலகத்தில் ஒரு பெரிய விழிப்பை விளைத்து அரிய வியப்பை கெடிது வளர்த்துள்ளது. 'கங்குல் எல்லைகாண்பளவும் கின்ருன் இமைப்பிலன் நயனம்’ என இவன் உறங்காது நின்ற நிலையைநோக்கிக் குகனும் உருகி அழுதிருக்கிருன். பரதனும் கேள்வியுற்றுக் கதறியிருக்கிருன். பரதன்முதலாக விரதமாதவர் எவரும் இவனது உறங்கா விரதத் கை வியந்து கொண்டாடிப் புகழ்ந்து போற்றியுள்ளனர். காமபோகங்களையும், சுகவாழ்வுகளையும், யாவரும் விலக்க முடியாத உறக்கத்தையும் விலக்கிவென்ற இலக்குவன் இங்கே எவரும் வெல்லமுடியாக அரக்கர் திர ன்களை எல்லாம் ஒருங்கே வென்று ஒழித்து மருங்கே வெற்றிவிருேடு விளங்கி கின்ருன். அரிய விரத ஒழுக்கங்களை உடையவரே பெரிய காரியங் களைச் செய்து முடிப்பர் என்னும் உண்மை ஈண்டு துண்மை யாக உணரவக்கது. அகப்பகைகளை வென்ற அதிசய விரன் புறப் பகைகளையும் வென்று புகழ்மீதுார்ந்து துதிகொண்டு நின்ருன். அடலோடு மூண்டுவந்த படைகள் எல்லாம் மாண்டன. கிலேமையை நினைந்து கினைந்து இந்திர சித்து நெஞ்சம் கொதித் தான். அவனுடைய கேருக்குப் பாதுகாவலாய்ப் புடைசூழ்ந்து வந்த அதிசய ம ல் ல ர் க ள் கண்டப்போர் செய்ய மூண்டார், இலக்குவன் வில்லின் வேலையை கிறுத் திக்கொண்டான். ஒத்த வில்லாளிகளோடு போராடுவதே உத்தம விரம் என்று உறுதி