பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,468 கம்பன் கலை நிலை அறியாமல் கிலைகுலைந்து போயிருக்கின்றனர்; தெறிப்போனவர் திசை தெரியாமலே யாண்டும் மயங்கி நிற்கின்றனர். இந்த மாய மயக்கங்களை மகோதரன் முதலிய தீய வஞ்சகர்கள் சேர்ந்து செய்துள்ளனர்; நமது அருமைத் துணைவர்கள் மீண்டு ஈண்டு வரவேண்டுமானுல் நேரே மூண்டு படர்ந்துள்ள சேனைகளையும் மாயசாலங்களையும் மாய்த்து ஒழிக்கவேண்டும், ஈசன் அருளால் எய்தியுள்ள சிவாஸ்திரத்தை விடுத்தே இந்த சேங்களை நாசம் செய்யவேண்டும் என்று மாருதி யோசனை கூறவே இலக்கு வன் ஆகாவோடு தேறி அதனைச் செய்ய விரைந்தான். எங்தைநின் அடியர் யாரும் எய்தலர் கின்னே. இளையவன் சிந்தை இரங்கிச் செயலில் இறங்கும்படி இக்க வுரையை அனுமான் இங்கே இப்படி இசைத்துள்ளான். தெய்வப் படையை நீ தொடுக்கவில்லையாளுவ் உன் அடியவர் வந்து உன்னே அடுக்க முடியாது என்று முடித்திருக்கிருன். வானாக் தலைவரை அடியர் என்றது உரிமையை உணர்ந்து விரைந்து கரு மம் புரியவேண்டும் என்னும் குறிப்போடு வந்தது. ஆவலோடு எவல்புரியும் அடியவர்களை ஆதரிக்கருளுவது ஆண்டவன்கடமை ஆதலால் அதனை ஈண்டு மூண்டு செய்யவேண்டும்என்று வேண் டிகின்றன். மதிமானை அவனது வேண்டுகோளுக்கு இசைந்து இவ்விரன் ஆண்டு விரைந்து அதிசய வேலை செய்ய நேர்ந்தான். பாசுபதம் அரிய தெய்வாஸ்திரத்தை ஏவிக் கொடியவர்களை அழித்தா லன்றிக் காரிய வெற்றியைக் காணமுடியாது என்று தெரியவே ஈசன் அருளால் எய்திய பாசுபதம் என்னும் அதிசய அம்பை எடுத்துப் பூசனை முகலியன செய்து இலக்குவன் இலக்கோடு எதிர்ந்துள்ள படைத்திரள்களில் எவினன். எவவே அது ஊழிக் தீபோல் ஒளிவீசி உருத்துப் பாய்ந்தது: எங்கும் சுடர் ஓங்கி அடலோடு அது சீறிப் பாயவே அரக்கர் யாவரும் அடியோடு அழிந்து வீழ்ந்தனர்; நெடிதாய் நீண்டு நின்ற சேனைகள் யாவும் நாசமடையவே மாயசாலங்களைச் செய்துவந்த மகோதரன் உள் ளம் கலங்கி விரைந்து மறைந்துபோயினன். மாருதி யோசனை பின்படியே ஈசன் கணேயை எடுத்து இளையவன் கொடுத்ததும்