பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4707 செறிந்தோர் வினைப் பகைவா! என்று சிவபரம் பொருளைத் தேவர்கள் ஆவலோடு இவ் வாறு உவகை மீதுார்ந்து துதித்திருக்கின்றனர். செறிதல்=கெரு ங்குதல். தன்னை நினைந்து அன்பால் உருகிவரும் அடியார்களு டைய இருவினைகளையும் நீக்கிப் பிறவியை ஒழித்துப் பேரின்பம் அருளவல்ல பெருமான் என்பது இங்கு நன்கு தெரிய வந்தது. முன்னே வினை இரண்டும் வேர் அறுத்து முன் கின்றன் பின்னேப் பிறப்பக்குறும் பேராளன் --- தென்னன் பெருந்துறையில் மேய பெருங்கருணே யாளன் வருந்துயரம் தீர்க்கு மருந்து. (திருவாசகம்) தனது வினைகளை வேர் அறுத்துப் பிறவியை நீக்கியருளிய பெருங்கருணை யாளன் என ஈசனை மாணிக்கவாசகர் உளம் உருகி இங்கனம் உரைத்திருக்கிருர். வினை நீங்கினுலன்றிப் பிறவி நீங்காது; பிறவி நீங்கிலைன்றித் துன்பம் நீங்காது என்னும் வேதத்துவம் இங்கேஉய்த்துணர வந்தது. சீவான்மா பரமான்வை நோக்கி உருகி மருவிய பொழுது அது பேரின்ப நிலையமாய்ப் பெருகி எழும் என்பது அரிய மருமமாத் தெரிய சேர்க்கது. போர் நிகழ்ச்சியைக் குறித்தக் கூறி வரும் பொழுதும் அரிய பெரிய ஆன்ம உண்மைகளை உலகம் உணர்ந்து உய்ய உணர்த்தி யருள்வது ஊன்றி உணர வுரியது. தனது காவிய நாயகன் பரம் பொருளின் அவதாரமே என்பதை இடங்கள் தோறும் அதி விநயமாய்க் கவி காட்டி வருகிருர்; அக் காட்சி உணர்வின் சுவையை ஊட்டி உவகையை நீட்டி வருகின்றது. சக்கரம் எடுத்தது.' அரிய வர பலத்தால் கிடைக்க பிரமாத்திரத்தை வறிதே இழந்து விட்ட இந்திரசித்து பெரிதும் கவன்று பேதுற்று கின் முன். இலக்குவனது அதிசய நிலையை வியந்து மதிமயங்கி நின் றவன் விரைந்து தெளிந்து சக்கராயுதத்தை எடுத்தான்; உரிய மந்திர முறை புரிந்து உக்கிர விரமாய் விடுத்தான். ஊழிக்கனல் போல் உருத்து எழுந்த அக் க ஆழிப்படையால் இளையவன் அழிந்தேபோவான்னன் று.அவன் உறுதியாக் துணிந்து நின்முன்,