பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 18 கம்பன் கல நில t அண்ணன் நீதிநெறிதவறித் தோப் பிறனுடைய மனைவியை விரும் பினன்; அதனல் அவனே விட்டுப் பிரிந்து வந்தேன் எனத் தான் இடம் பெயர்ந்ததற்கு உரிய காரணத்தை அடிக்கடி வீடணன் கூறி வருகின்ருன் ஆகலால் அதனையும் இதல்ை குறிப்பா இகழ் ந்தான். இகழ்ச்சிக் குறிப்பு உணர்ச்சிகளை விளக்கியுள்ளது. குடும்பத்தில் இருக்கப் பிடிக்கவில்லையானல் வேறு எங்கே யாவது கனியே ஒதுங்கி வாழ்; அல்லது துறவியாய்க் காட்டுக் குப் போய்க் கொலை; அவ்வாறு பாதும் செய்யாமல் நேரே பகைவனிடம் சேர்ந்து கொண்டு பழி அவமானங்களை விளைத்து வருகிருப் என இளித்திருப்பதையும் இதில் தெளித்து கின்ருன். சிறந்த நீதிமான்போல் தருமங்களை விரித்துப் பேசுகின் ருப்; கருமங்களில் கடையாயிழிந்து நிற்கின்ருய் எனக் கடிந்தி ருப்பதும் காண வந்தது. தான் மருமமாய் மறைந்து செய்கிற காரியங்களை அதி இரகசியமாயறிந்து போப் எதிரிகளிடம் உளவு கூறி இழவு கூட்டி வருவதையும் அளவு காட்ட முரசின் ஒலியைக் குறித்தான். ஒப்புரை நுட்பம் மிக வுடையது. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (குறள், 1076)

–H– அடிக்கப்பட்ட பறை அயலே ஒலித்து உணர்த்தல்போல் அறியப்பட்ட மறையைப் பிறரிடம் ஈயமாக் கயவர் உரைத்து விடுவர் என இது உணர்த்தியுள்ளது. மறை= மறைத்து வைத் துள்ள இரகசியம். அறைபறை போல் கயவர் மறையை வெளிப் படுத்தி விடுவர் என்னும் இது முரசம் என்ன இசைக் கின்ருய் என்ற அதில் தொனித்திருக்கிறது. கொனிக் குறிப்பு துணித்து உணரத்தக்கது. உள்ளக்கொதிப்பு உரையில் வந்துளது. அவனுடைய பேச்சு செயல் நிலை முதலிய யாவும் பிழை பாடுகளுடையன என்று இவன் எண்ணி இகழ்ந்து வருவது எதிரே தெரிய வந்தது. பழி நிலையை விழிகாண விளக்கினன். உலகம் வழிபட வந்ததேனும் பழிபட வந்த வாழ்வு. பாழ் என்றது அவன் வாழும் வாழ்வின் தாழ்வை நினைத்து.