பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4940 கம்பன் கலை நிலை அழித்தது என்று கூறியிருக்கலாம். அவ்வாறு கூறவில்லை. ஊழி அனல் எனப் பாழிமை கோன்ற வுரைத்தார். பகழியின் விழுமிய நிலையும், விளிவின் விளைவும், விதியின் வகையும் தெளிவுறவந்தது. தீயவரைத் தியெனக் கனன்று தாயவன் தொலைத்து வருகி ருன்; அடுத்து வருவார் அனைவரையும் கடுத்து எரித்து வெற்றி விருேடு வருகிற அங்கிலையினைப் பலவகை உவமைகளால் க வி விளக்கியிருப்பது வித்தகக் கலையாய் விளங்கி வருகிறது. ஒப்பு களை நுட்பமா நோக்கி உரிய பொருள் ய ங் க ளை ஒர்ந்து உணர்ந்து அரிய விர நிலையை ஆய்ந்து கொள்ள வேண்டும். கொடிய குறைக் காற்றின் எதிரே புழுதிப் படலங்கள் போல் இராமபாணத்தின் எ தி .ே இராக்ககர் நிலை குலைந்து அழிந்து போயினர். அப்போக்கை நோக்கி அறிய இராமன் ஊழி மாருதம் ஒத்தனன், அரக்கர் பூழி ஒத்தனர் என்ருர். ஆலகால விடம் எழுந்த பொழுது கடல் மீன்கள் அலமந்து அழிந்தது போல் இராம சரம் பாய்க்க போது அடலாண்மை யுடைய அர க்கர் அதிவிரைவில் நாசமடைந்த மாய்ந்தனர். நேர்ந் தவர் எ வரும் அயலே பேர்ந்து போகாமல் மாண்டு மடிந்ததை உவமைக் குறிப்பால் ஒர்ந்து கொ ள்ளுகிருேம். அவங்களே புரிந்து யா ண்டும் அடல் மிகுந்து வந்தவர் ஈ ன் டு உயிர்கள் ஒழிந்து உடல்கள் சிதைந்து சவங்களாய்க் குவிந்தனர். கொடிய பாவ காரிகளை முடிய நூ.ணுவதில் கடிய வேகம் காட்டி இந் நெடியவன் நிலவி வந்தது பெரிய அதிசயமா ப் நின்றது. உலர்ந்த செத்தைகளைச் சண்டமாருதம் விசி எறிவது போல் இவ்விரன் கிருதரை நாசமாக்கி கின்ருன். அந்த ச நிலைகளையெல்லாம் யோசனை செய்து உறுதியோடு தெளிவா உனர்ந்து கொள்ள உவமவாசகங்கள் ஈண்டு நவமாய் வந்தன. நெடியோன் அறம் ஒக்கும்; அரக்கர் மறம் ஆர் குலம் ஒத்தனர். போரில் கின்ற இராமனையும் போராட மூ ண் டு நேரில் நீண்டு வந்த இராக்க கரையும் இ ங் ேக நேரே நிறை தாக்கி கோக்குகின்ருேம். புண்ணிய உருவம் கண் எதிர் நின்றது.