பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4964 கம்பன் கலை நிலை குவித்து வருவதை ஒன்றும் உணர முடியாமல் யாவரும் பொன்றி மடிந்தனர். மூண்டு போராட வந்தவர் மாண்டு மடிந்த நிலை யாண்டும் மாய மயக்கமாய் நீண்டு மருமசாலமாய்நிலவியது. தேர்மேலும் யானை மேலும் குதிரை மேலும் பார்மேலும் கின்று போர்மேல் மூண்ட நால்வகைச் சேனைகளும் நாசம் அடைந்தன. கடல் போல் கலித்து வந்த படைகள் அடலோடு இடங்கள் தோறும் தொடர்ந்து போராடின. பொருமுகம் புகுந் தன யாவும் ஒரு முகமும் காணுமல் உயிர்கள் அழிந்து ஒழிந்தன; உடல்கள் யாண்டும் மலைகளாய் நீண்டு நிலைகள் ஓங்கி நின்றன. அமரின் அதிசயம்; ஒரு வில்லே கையில் உள்ளது; வேறு யாரும் துணையில்லை; எல்லை கடந்த படைகள் வெள்ளமாப் விரிந்து வந்தன; தன்னங் தனியனப் நின்ற இராமன் போரில் ஏறவே அவை யாவும் நீருப் மாய்ந்து நெடிது குவிந்தன. இந்தச் சுத்த வீரன் செய்த போரும், கிருதர் திரள்கள் செத்து விழுந்த சீரும் அதிசய விசித் திரங்களாய்த் தோன்றின. மாயமே என யாவரும் மயங்கினர். காயிருஞ் சிலேஒன்றேனும் கணேப்புட்டில் ஒன்ற தேனும் து.ாயெழு பகழிமாரி மழைத்துளித் தொகையின் மேல ஆயிரம் கைகள் செய்த செய்தன அமலன் செங்கை ஆயிரம் கையும் கூடி இரண்டுகை ஆய வன்றே. (Z) கண்ணுதல் மூர்த்தி தானும் நான்முகக் கடவுள் தானும் எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணல் உற்ருர் பண்ணேயால் வகுக்க மாட்டார் தனித்தனிப் பார்க்கலுற்ருர் ஒண்னுமோ கணிக்கஎன்பார்உவகையின் உயர்ந்ததோளார். வெள்ளம் ஈரைந்து நூாறே விடுகனே அவற்றின் மெய்யே உள்ளவாறுளவாம்என்றே உரைக்கணக்கு உணர்துமேனும் கொள்ளேயோர் உருவுஐஆாஅ கொண்டன பலவால் கொற்ற வள்ளலே வழங்கி ேைன என்றனர் மற்றை வானேர். (3) கொடைக்கெலாம்கொடிகட்கெல்லாம்கொண்டனகுவிந்த கொற்றப் படைக்கெலாம் பகழிக்கெல்லாம் யானே தேர் பரிமா வாதிக் கடைக்கெலாம் துரந்தவாளிக் கணித்ததற்கு அளவைகாட்டி அடைக்கலாம் அறிஞர்யாரே என்றனர் முனிவர் அப்பால்.(4)