பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4966 கம்பன் கலை நிலை மூலபலப் படையில் சேர்ந்து வந்துள்ள கிருதர் யாவரும் பொரு திறல்களில் அதிசய நிலையினர்; ஒரு அரக்கன் ஆயிரம் அமரர் களை எளிதே வெல்ல வல்லவன்; அத்தகைய பேராற்றலுடைய அரக்கர்கள் பல்லாயிரம் கோடிபேர் கடல்போல் திரண்டு அட லோடு ஆர்த்து வந்துள்ளனர்; பாண்டும் வெகுண்டு விர வெறி யோடு மூண்டு கோரமாய்ப் போராடினர்; போரில் ஏறி வந்த யாவரும் நீருய் மாய்ந்து நிலத்தில் குவிந்தனர்; பின மலைகளும் இரத்த வெள்ளங்களும் யாண்டும் பெருகி நீண்டு நின்றன. பொல்லாத அரக்கர் குலங்கள் இவ்வாறு பொன்றி முடிய இவ்வென்றி விரன் வில்லாடல் புரிந்தது எல்லாருக்கும் எ ல்லை மீறிய வியப்பை விளைத்தது. அவ் வியப்புக்கு ஈயப்பாய் ஒர் விளக்கம் வந்தது. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க நேர்ந்தன. ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆய. இராமன் ஒரு மனிதன்; இர ண்டு கைகளை யுடையவன்; பல்லாயிரம் பகழிகளை ஒல்லையில் கொடுத்து எல்லையில்லாத அரக் கர்களை அழித்திருக்கிருனே! என்று உள்ளம் வியப்படைந்து கிம்பவர்க்கு உண்மை நிலையை உணர்த்த இவ்வாசகம் ஈண்டு உருவாகி வந்துள்ளது. கைசெய்தவேலைமெய்தெளியச் செய்தது.


திருமால் எல்லாம் வல்லவன்; அதிசய ஆற்றல்கள் உடை யவன்; பல்லாயிரம் அவுனர்களையும் ஒருங்கே ஒல்லையில் கொல்ல வல்லவன் ஆதலால் ஆயிரம் தோளன் என வானேர் அவனை வாழ்த்த சேர்ந்தனர். கோள்களின் அளவுகள் துதிகளாயின. மாயிருங் குன்றம் ஒன்று மத்தாக மாசுணம் அதைெடும் அளவி பாயிரும் பெளவம் பகடுவிண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திகைப்ப ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்க் தானே. (1) ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனேய அடல்புரை எழில் திகழ் இரள்கோள்