பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5014 கம்பன் கலை நிலை கொண்டு எவ்வழியும் திவ்விய நிலையில் நிற்கின்றன. Courage is, an all hands, considered as an essential of high character. (Froude) ‘' எல்லா வகையிலும் கைரியம் என்பது உயர்ந்த ஒழுக்கத் தின் சாரமாய் அமைந்துள்ளது” என ப்ரூடு என்னும் அறிஞர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். சீலத்தில் வீரம் சிறந்து நிற்கிறது. புனிதமான பிரமச்சாரி ஆகலால் இம்மதி மானிடம் அதி சய சக்தி பெருகி யிருக்கிறது. புலன்களை அடக்கினவன் எதிரே உலகங்கள் அடங்கி நிற்கின்றன. தரும தேவதையின் சிவ ஒளி இக்கரும வீரனிடம் மேவி மிளிர்கிறது. இவனை உறவுரிமை யாகப் பெற்றது தனது புண்ணியப் பேறு என்றே இராமன் எண்ணி மகிழ்ந்து வருவதைக் காவியத்தில் இடங்கள் தோறும் கண்டு இவனது நிலைமையை வியந்து தெளிந்து வருகிருேம். அருமை என் இராமற்கு அம்மா ! அறம் வெல்லும் பாவம் தோற்கும். சாம் பவன் முதலிய அறிஞர்கள் இவ்வாறு எம்பலோடு இயம்பி உவந்திருக்கின்றனர். அனுமான் உரிமையாய் அமைந் திருக்கலால் இராமபிரானுக்கு எல்லாம் இனிமையாய் முடியும் என்று எல்லாரும் உவகை கூர்ந்துள்ள உரைகளால் அவனது உத்தம சக்திகள் இங்கு நன்கு உய்த்து உணர வந்தன. அபாயங்கள் யாவும் கடந்து போயின; இனி யாதொரு இடறும் நேராது; எ திரியை விரைந்து வென்று விடலாம் என்று தைரியம் மீதுளர்ந்து கின்ருர், புண்ணிய மூர்த்தியான இாமன், இனி வெற்றி பெறுவது உறுதி என்பார் அறம் வெல்லும் என்ருர். பாவம் தோற்கும் என்ற த பாவமே பயின்றுள்ள இலங்கை வேங்கன் பாழாப் அழித்து போவன் என்பது தெளிந்து கொள்ள. அழிவுக்கு உரிய காரணம் பூரணமாய் ஈங்குக் காண வந்தது. பாவம் கஞ்சினும் கொடியது; அதனேடு பாதும் பழக லாகாது; பழகினல் அழிவே நேரும். கருமத்தையே கழுவி வாழுங்கள்; அது கான் உங்களுக்கு வெற்றியும் இன்பமும் அரு ளும் என உலகமக்களுக்கு ஒர் உறுதியான போகனேயை ஈண்டு உணர்த்தியருளினர். கருமம் எவ்வழியும் பெருமையே தருகிறது.