பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5024, கம்பன் கலை நிலை கறவை கன்று இழந்த போன்றும் கிடந்தழுகின்ற கண்ணுர். (சிந்தாமணி, 1283) கன்றை இழந்த போது கறவை படும் துயரை இது காட்டியுள்ளது. பிரிவின் பரிவு கறவையிடம் பெருகியுளது. கறவை காண் கன்றின் வெஃகி (சிந்தாமணி, 1125) கறவையைக் கண்டபோழ்து கன்று மகிழ்வதை இது நன்கு உணர்த்தியுள்ளது. மனித அன்பினும் அது மகிபை மிகுந்தது. கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கிள்ை. (இராமா, நகர் நீங்கு 14) கன்றுபிரி காராவின் துயருடைய கொடி. (இராமா, குகப்படலம் 66) இராமன் பிரிக்க பொழுது கோசலை கரைந்து கலங்கி வருந்தியிருந்த துயர நிலையை இது வரைந்து காட்டியுள்ளது. உரிய தாயையும் அரிய மகனையும் கறவை கன்று என இனேக் துப் பிரியம் மீதுார்ந்த பெரிய பரிவுநீர்மைகளை உணர்த்தியுள்ளார். குண நலங்களின் உயர்நிலைகள் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவுரியன. இளங்கன்றினேப் பிரிவுற்று -- எய்திய ஆவின் பான்மையான். (இராமா, அயோமுகி 84) நடுகிசியில் பிரித்து கண்ணிர் கொண்டுவரப்போ ன இலக்கு வனநெடுநேரம் காணுமையால் வருந்தி கொங் த இறந்து போக நேர்ந்த இராமன் பின்பு அவனைக் கண்டபோது உவந்த நிலையை இது உணர்த்தியுள்ளது. விழுமிய அன்புகள் விழிதெரிய வந்தன. ஈன்ற கன்றையும் கறவை ஊட்டில. (இராமா, நகர் 214) இராமன் காட்டுக்குச் சென்றபோது அயோத்தி நகரில் அன்று ஈன்ற கன்றுக்கும் பால் ஊட்டாமல் கறவைகள் மறுகி கின்றன என அவற்றின் பரிவு நிலைகளை இது குறித்திருக்கிறது. கறவையும் கன்றும் காவியத்தில் இன்னவாஅ துறை கள் தோறும் தோப்ந்து வந்திருக்கின்றன. கன்றுக்கு இடர் நேராமல் கறவை காப்பது போல் கருணையாளர் காத்தருளுவர். அத்தகைய பாதுகாப்பைப் போர்முகத்தில் வீடணனுக்கு கேர்