பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#906 கம்பன் கலை நிலை புள்ளன. அவ்வுண்மைகளை இடங்கள் தோறும் காரியங்களில் கண்டு வருகிருேம். எவ்வழியும் எச்சரிக்கைகள் எய்துகின்றன. தனது த னி ைம ைய நினைந்து தயங்கி நிற்கலாகாது; விரைந்து அயலே போய் வானரங்களைக் காத்து கில் என்று தன் தம்பியை நோக்கி இங்கம்பி சொல்லி யுள்ளதில் வீர கம்பீரம் ஒளி விசி கிற்கின்றது. போரில் பிறருடைய சகாயத்தை விரும்பா தவனே அசகாய சூரன் என விர வுலகம் வியந்து பாராட்டி வரும். வியஞன அந்த வீர நிலையை இக்குல மகனிடம் இங்கே உவத்து கானுகின்ருேம். கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! என வாலி முன்னம் இராமனை நோக்கிச் சொன்ன வாய்மையை இக் கொற்றவன் ஈண்டுத் தாப்மையாக் காட்டியிருக்கிருன். கூட்டு யாரும் வேண்டாம் என்று குறித்திருப்பது இவ்விரனது உள்ளத் துணிவையும் உ று தி நிலையையும் தன் நம்பிக்கையும் நன்கு உணர்த்தி கின்றது. தனக்குத் தானே துணை என்று தன் னேயே கருதி உ று தி பூண்டுள்ளமை தனி முதல் தலைமையாய் இனிது மிளிர்கிறது. மனத்திண்மை மகிமை விரமாப் நின்றது. “True valour lies in the mind.” [Thomson] உண்மையான விரம் உள்ளத்தில் உள்ளது' என இ து உரைத்துள்ளது. அவ்வுண்மையை இவ்விர வள்ளல் இங்கே உணர்த்தியுள்ளான். தனிமை நிலை தகைமை காண வந்தது. சுத்த வீரம் உத்கம ஆத்தும கத்துவமாய் ஒளி புரிகின்றது. சத்தியம் நீதி கருமம் முதலிய புனித நீர்மைகள் உடையவன் ஆதலால் இராமபிரானிடம் அதிசய வீரம் குடிகொண்டுள்ளது. உள்ளத்தில் நல்ல தன்மைகள் நிறைந்த பொழுது அங்கே உறுதி யும் ஊக்கமும் உயர்ந்த வீரமும்ஒளிமிகுந்து ஓங்கி வளர்கின்றன. “The best hearts are ever the bravest.” (Sterne) 'நல்ல இருதயங்கள் என்றும் உயர்ந்த வீரமாயுள்ளன' என ஸ்டெர்னி என்னும் ஆங்கிலப் பெரியார் இங்கனம் கூ றி யிருக்கிரு.ர். புனிதமான நல்ல மனம் எல்லாம் வல்லதாகிறது. தனக்குத் துணையாய் அ ரு கு நில்லாமல் அயலே போப் வானரங்களைக் காக்க வேண்டும் என்று இங்கம்பி கூறியபோது தம்பி அவ்வாறே இசைந்தான். அண்ணனைக் கண் எனக் கருதிக்