பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5205 Charms strike the sight, but merit wins the soul. (Pope) புற அழகுகள் கண்ணேக் கவர்கின்றன; ஆனல் குண நீர்மை உயிரைக் கொள்ளை கொள்ளுகிறது என இது குறித்துளது. இராமனது அகமும் புறமும் அறிய வந்தன. தன்ஜனப் பார்த்தவரை வசப்படுத்துவது எதவோ அ.சி வசியம் என வங்கத்து. இனிய சவுக்கரியமும், அரிய குணங்களும் மனித சமுதாயத்தை யாண்டும் மகிமைப்படுத்தி வருகின்றன --- Manhood, learning, gentleness, virtue, youth, liberality, and such like, the spice and salt that season a man. (Shakespeare) ஆண்மை கல்வி அமைதி சீலம் இளமை தயாளம் முதலிய இனிமைகள் மனிதனைச் சுவைப்படுகதி எவ்வழியும் மனம் பெறச் செய்கின்றன என்னும் இக்க ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர்ந்து ஒர்க் து சிந்திக்கத்தக்கது.) இனிய நீர்மைகள் நிறைந்து அரிய ர்ேமைகளோடு பெருகி யுள்ளமையால் இராமனை உலகம் உவந்து போற்றி வருகிறது. இவனது சீவியக்கை விழைந்த கொண்டு பல மொழிகளிலும் பல காவியங்கள் விளைந்துள்ளன. நமது கமிழ்மொழியில் தோன் றியுள்ளது அமிழ்தம் என நமக்கு இன்பம் சுரந்து அருளுகிறது. (சொல்லிலும் பொருளிலும் தொடையிலும் நடையிலும் குறிப்பிலும் கொனியிலும் இனிய பல சுவைகளை எவ்வழியும் இராம காவியம் செவ்வையா விளைத்து வருகிறது. அறிவு நலம் கனிக்க அந்த இன்ப விளைவுகளை மதி நலமுடையவர் இனிது நுகர்ந்து புனித வாழ்வுகளில் பொலிந்து வருகின்றனர். பொருகளத்தில் நெடுநேரம் போராடி வந்த இராமன் முடிவில் இராவணனைக் கொன் அறு முடிக்கும் வழியை இங்கே நின்று சிந்திக்கின்ருன். கொலை செய்ய நாடி கின் கின்றவனைக் கவி பாடிக்காட்டியிருக்கும் காட்சி அவனது நிலையை நேரே விளக்கி நேர்ந்துள்ள போரின் சீரை நன்கு துலக்கி நிற்கிறது. ைேவ அனைத்தும் துறந்தவன் என இராமனை இங்கே குறித் கது ஈவைகள் நிறைந்துள்ள பகைவனை அடியோடு அழிக்க மூண்டுள்ளமை கருதி. கொடிய கவைகளை நீக்கி இனிய சலன்