பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்திணை இயல்பும் அணிபெற ஆய்ந்து
பைந்தமிழ்ச் சுவைகள் பலவும் தோய்ந்து
கல்விச் சிறப்பும் காவலர் ஆட்சியின்
பல்வகை நலனும் படிந்த பண்பினர்
உயர் தமிழ்ப் புலமையோடு உணர்ச்சி ததும்பச்
சொன்மழை பொழியும் தூய மாமுகில்
தேசு மிகுந்தொளிர் செகவீர பாண்டியர்
தந்தருள் இன்பக் கம்பன் கலையைக்
கண்டு மகிழ்ந்து கவினில் ஆழ்ந்தேன்
உள்ளம் களித்தேன் உணர்ச்சியில் திளைத்தேன்
சொல்லுதற் கரிய சுவைபல நுகர்ந்தேன்
எல்லையில் இன்பருள் நல்லாசிரியர்
பல்லூழி காலம் பண்புடன் வாழ
எல்லாம் வல்ல இறைவன்
சொல்லார் அடிகள் தொழுகுவம் யாமே.
ரா. சுப்பிரமணியன்