பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1164. கம்பன் கலை நிலை

எடுத்த வில்லுக்கு இனிய மலர் மாலையை ஒப்புரைக்க.. மங்கலமாய்க் கிருமணம் நன்கு கிறைவேறியது என்பதை முன்புற உணர்த்திய படியாம். மணமகள் பாம பாக்கியமாய் வந்து அமைந்துள்ளமையால் தேடரு மா மணி என அப்பாடறிய வந்தது. மணி அணிய மணி வண்ணன் மருவி கிண்ருன் என்க.

சீதை குட்டிட நீட்டும் மாலை எனப் பாட்டு அமைந்திருக்க லால் இராமனுக்கு அவள் சூட்டிட நீட்டிய பூமாலைபோல் வில்லே அக்கோமகன் ஒல்லையில் தாக்கி எல்லாரும் காண உல்லாசமாய் நீட்டினன் என்க. மணமக்கள் இருவரும் மனமாலையை மாற்றின்

சூட்டிக்கொண்டபடி பாட்டு அமைந்து பரிசு அறியவுள்ளது.

சூடக வால் வளை=கங்கனமாக வெள்ளிய'சங்க வளையல்கள் அணிந்த செங்கையை யுடையவள். சனகியை இங்கனம் குறித்தது மங்கலம் கருதி. கழுத்தில் தாலிபோல் கையில் வளையல் பெண் களுக்கு ஒரு மங்கலமாம். இதுபொழுது கிகழவுள்ள திருமண நலனைப் பெருமணம் விசப் பேசி யிருக்கிரு.ர்.

எடு=பூவிதழ். அரும்பு மாலை அன்று; அலர்க்க மாலை எனப் பருவம் கனிந்துள்ள உருவம் காண வந்தது.

கன்னிக்குச் சுல்கமாயிருக்க வில்லைத் துளக்கவே கலியானக் காட்சியை இங்ாவனம் மங்கலமாக நோக்க வைக் கார்.

வில் வளைத்த விறல்.

இவ்வண்ணம் இராமன் வில்லை எடுக்கவே அயல் எங்கனும் சூழ்ந்து கின்றவர் எல்லாரும் அதிசய பரவசாாய் விழிக்க கண் இமையாமல் விழைந்து பார்க்கார். கொடுத்துப் பார்க்க அப் பார்வைகளை அடுத்துப் பாருங்கள்.

தடுத்திமை யாமல் இருந்தவர் தாளின் மடுத்ததும் காணுதி வைத்ததும் கோக்கார் கடுப்பினில் யாரும் அறிக்கிலர் கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார். (கார்முகம், 8-1) இாாமன் வில் வளைக்க காட்சியை இங்கனம் இது காட்டி யுள்ளது. கிகழ்ச்சிகளை விளக்கி யிருக்கும் கிலை தனித்து நோக்கக் தக்கது. ஒரு விாக்காட்சியை ஈண்டு வியந்து பார்க்கின்றாேம்.