பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 1201

மருள்மயங்கு மடங்தையர் மாட்டொரு பொருள் நயந்திலன் போகின்ற தேயிவன் கருணை என்பது கண்டறி யான்பெரும் பருனி தன்கொல்? படுகொலையான் என்றாள். (8)

பூக ஊசல் புரிபவர் போலொரு பாகின் மென்மொழி தன்மலர்ப் பாதங்கள் சேகு சேர்தரச் சேவகன் தேரின் பின் ஏகும் மீளும்இது இன்செய்த வாறரோ? (9) பெருத்த காதலில் பேதுறு மாதரின் ஒருத்தி மற்றங்கு ஒருத்தியை கோக்கி என் கருத்தும் அவ்வழிக் கண்டதுண் டோஎன்றாள் அருத்தி புற்றபின் காணம் உண் டாகுமோ ? (10)

நங்கை அங்கொரு பொன்னயங் தார் உய்யத் தங்கள் இன்னுயிரும் கொடுத் தார்தமர் எங்கள் இன்னுயிர் எங்களுக்கு ஈகிலா வெங்கண் எங்ஙன்விளைந்தது இவற்கு என்றாள். (11) நாமத் தாலழி வாளொரு கன்னுதல் சேமத் தார்வில் இறுத்தது தேருங்கால் துாமத் தார்குழல் துாமொழித் தோகைபால் காமத் தாலன்று கல்வியி ல்ை என்றாள். (12)

ஆர மும்துகி லும்கலன் யாவையும் சோர இன்னுயிர் சோரும் ஒர் சோர்குழல் கோர வில்லிமுன் னே எனக் கொல்கின்ற மார வேளின் வலியவர் யார்என்றாள். (13) i (உலாவியற் படலம்) காதல் களிப்பில் மூழ்கி மையல் மீதுார்ந்து மாதர் இவ்வாறு பேசி யிருக்கிறார். உரைகள் அவருடைய உள்ளங்களை வெளிப் படுத்தி கை வகையில் தொகை புரிந்துள்ளன.

தனித்தனியே இராமனே நோக்கி அவர் உரைத்த மொழி களில் உருக்கமும் மறுக்கமும் பெருகி இருக்கின்றன.

1. பெரிய மலைபோல் வலிமிகுந்து கிடந்த நெடிய வில்லை _ஒரு நொடியில் பொடி செய்து அருளிய ஒ புண்ணிய மூர்த்தியே ! கொடிய மன்மதனுடைய மெல்லிய கரும்பு வில்லையும் ஒடித்து

151