பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}(58 கம்பன் கலை நிலை

உற்ற மயக்கம் ஒழிக் து உண்மை தெளிக்க கத்துவ ஞானி ஈனப்பிறப்பு நீங்கி இறைவனே அணுகித் திவ்விய கேகியாய்ச் சிறந்துகிற்றல் போல் சாபம் தீர்ந்ததும் பாப வடிவம் போய்ப்

பழைய தாய உருவில் அகவிகை துலங்கி கின்றாள் என்பதாம்.

உண்ட பேதைமை = உயிரை விழுங்கியுள்ள மடமை. ஆன்மா உட்கொண்டுள்ள முடம் எனவுமாம். உண்மை கிலையை உனா ஒட்டாமல் மயக்கிக் களிப்பூட்டி உயிரினங்களைத் துயரி னங்களில் இயக்கி கிற்றலால் பேதைமை மயக்கு என வந்தது.

பழைய மேகைமையை இழந்து பாழாய் இழிந்து பிற வித் துயரில் விழுந்து உயிர்கள் ஒயாது உழலும்படி பேதைமையே பிழைசெய்துள்ளமையால் அது நீங்கின் உயர் கதியாம் என்றார்.

‘’ பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு. (குறள், 358) ‘’ பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும்

வேதனே மரங்கள் காறி வேட்கைவே வீழ்த்து முற்றிக் காதலும் களிப்பும் என்னும் கவடுவிட்டு அவலம் பூத்து மாதுயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து கிற்கும்.

(சீவக சிங்தாமணி, 1889)

‘’ பேதைமை சார்வாச் செய்கை ஆகும், செய்கை சார்வா உணர்ச்சி ஆகும், உணர்ச்சி சார்வா அருவுரு ஆகும். அருவுருச் சார்வா வாயில் ஆகும். வாயில் சார்வா ஊறு ஆகும்மே! ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் வேட்கை சார்ந்து பற்றாகும்.மே ! பற்றில் தோன்றும் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரணமாக வருமே ஏனே வழிமுறைத் தோற்றம்: தோற்றம் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலேகை யாறு எனத் தவலில் துன்பம் தலைவரும் என்ப. (மணிமேகலை, 30)

பிறப்புக்கு மூலகாரணம் பேதைமையே; அதன் அடியாகவே துன்பங்களெல்லாம் தொடர்ந்து வந்திருக்கின்றன என்பதை