பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151z கம்பன் கலை நிலை

கால்பாய்வன முதுமேதிகள் கதிர்மேய்வன கடைவாய் பால்பாய்வன கறைபாய்வன மலர்வாய் அளி படரச் சேல்பாய்வன கயல்பாய்வன செங்கால் மடவன்னம் போல்பாய்புனல் மடவார்படி நெடுநாடவை போனார்.

(கங்கைப்படலம், 1–8) உள்ளே பொதிந்துளள ம பாருள் நிலைகளை விரும்பி நோக்கா மலே வெளியே உல்லாசமாய்ப் பாடி மகிழும்படி இந்தப் பாடல் கள் சந்தச்சுவை பொலிந்து செவிக்கும் சிங்கைக்கும் இன்ப நலம் ததும்பி இருக்கின்றன. மொழிகள் எழில்சாந்து அதிசய சாதுரி யங்களாய்த் தொழில் புரிந்து வருகின்றன. அன்பும் அறிவும் பண்பும் பாவி அரியபொருள் வளங்களை அருளி மிளிர்கின்றன.

வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியில் மறையப் பொய்யோஎனும் இடையாளொடும் இளேயானொடும் போனன்.

அதிகாலையில் நம் மான விான் கானகம் நடந்த காட்சியை இங்கே கண்டு வியந்து கருதி மகிழ்ந்து உரிமை கூர்ந்து கிற்கின் ருேம். வெய்யோன் = சூரியன். வெம்மையான செனங்களை யுடையவன் என்னும் காானத்தால் இங்கப் பெயர் வந்தது.

உதய காலத்தில் இளஞ் சூரியனிடமிருந்து செஞ்சோதி எழுத்தது; அவ் ஒளி இராமன் திருமேனியில் படிந்தது; படியவே ஒரு புதிய பசிய சோதி எதிரே அதிசயமாய் விசியது ; இள வெயில் கிறம் மாறி அயல் எங்கும் பச்சையாய்ப் பசுமைஒளி படர்ந்தது. ஆதலால் ‘தன் மேனியின் விரிசோதியில் வெய்யோன் ஒளி மறைய’ என்றார்.

பளிங்கு கண்ணுடி முதலிய ஒளியுடைப் பொருள்களில் வெயில் வந்துபடின் அவற்றிலிருந்து எதிர் ஒளி வீசும் ; அந்தப் பிரதி பிம்பங்லை இங்கே அரிய கிலையில் பிாகி பலித்தது.

உயர்ந்த ஒளி கிறைந்த மரகத மணி போன்ற பச்சைத் திருமேனியில் சிவந்த கதிர் ஒளி படவே எழில் மிகுந்த அத் திருமேனியிலிருந்து பசுமை சோதி மிளிர்ந்து கிளர்ந்து வெளி விசியது; அதல்ை அச் சிவக்க வெயில் பசந்து தோன்றியது.

பரமபகநாதன் பசிய ஒர் சூரியன்போல் உதயமாகியுள்ளான்;

அவன் எதிரே உலக சூரியன் கிலைமாறி ஒளி மறையலானன்.