பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 புல்லின் இதழ்கள்

  • நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் யோசனை யில் ஆழ்ந்து விட் டீர்களே, உங்கள் அரங்கேற்றத்துக்கு நான்தான் தம்பூரா போடப்போகிறேன். சரிதானா?”

ரொம்ப சரி, பிரமாதமாக இருக்கும். அப்படியே செய்துவிடு. எழுந்து போகிற கூட்டம் உனக்காகவாவது கலையாமல் கடைசி வரையில் இருக்கும்’ என்றான்.

அதற்குள் கீழேயிருந்து ‘ஹரி, ஹரி!’ என்ற சுசீலா வின் குரலைக் கேட்டு இருவரும் பேச்சை நிறுத்தினர்.

காணோமென்று கவலைப்பட்டீர்களே! இதோ வந்தாச்சு. போய் என்னவென்று கேட்டு வாருங்கள்’’ என்றாள் வசந்தி.

ஹரி அவள் முகத்துக்கெதிரே போலிக் கோபத்தோடு கையைக் காட்டிவிட்டுக் கீழே இறங்கினான்.

ஹரியைக் கண்டதும், வசந்தி எங்கே? பாடச்சொல்லி அப்பா அனுப்பினாராம். பாட்டையும் காணோம், தம்புராச் சத்தத்தையும் காணோம். அரை நாழிகையா அரட்டைதான் கேட்டுக் கொண்டிருக்கிறது. அரங்கேற்றத் துக்கு இன்னும் இரண்டு நாள் இல்லை. இது தான் சாதகம் போலிருக்கிறது! வாருங்கள் சாப்பிட’ என்று கூறி, அடுக் களையை நோக்கிச் சென்றாள்.

வசந்தி இதைக் கேட்டுக்கொண்டே கீழே இறங்கி வந்தாள். இவள் என்ன என்னை அதிகாரம் பண்ணு கிறது? அரட்டை அடிக்கிறாளாமே அரட்டை! இந்த வீட்டுக்கு இவள் எஜமானியா, அல்லது சர்வாதிகாரியா? நீங்கள் இந்த வீட்டில் இவளோடு எப்படித்தான் இருக் கிறீர்களோ, தெரியவில்லை. நானும் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். இவள் படுத்துகிற பாட்டை. அப்பா விடம் சொன்னால்தான் நல்லது. எனக்கு சாப்படும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். நீங்கள் போய்ச்