பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புல்லின் இதழ்கள்

நான் என்ன தவறு செய்தேன்?” என்று அவன் பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறான். அப்படி அவள் நடந்து கொள்ள ஒரு குற்றமும் தான் செய்ததாக அவனுக்கு நினைவே இல்லை. ஆயினும் அவனுக்கு ஒன்று புரிந்தது: அன்பு காட்டுவதற்கும் வெறுப்பூட்டுவதற்கும் காரண காரியம் எதுவும் தேவையில்லை. எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒன்று இருக்கிறது. அது அவரவர் மனத்தைப் பொறுத்த விஷயம். அதை ஆராய்ந்து மூளையைக் குழப்பிக் கொள்வதைவிட, சுசீலாவிக்கு என்னை ஏனோ பிடிக் காமற் போய்விட்டது” என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுவது எளிதாக இருந்தது.

சுசீலா தன் வெறுப்பை ஒவ்வொரு சிறு செயலிலும் காண்பித்தாள். முதலாவது தன் தந்தை ஹரியைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டோடு வைத்துக்கொண்டு வித்தை சொல்லிக் கொடுத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. மற்றச் சிஷ்யர்களைவிட, அவர் அவனிடம் அதிகச் சிரத்தையும் அக்கறையும் காட்டுவது பிடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, காயத்திரி அவனிடம் அன்போடும் கருணை யோடும் நடந்துகொள்வது கட்டோடு பிடிக்கவில்லை. தான் வெறுக்கிற ஒருவனை அக்காவும் வெறுக்க வேண்டும் என்பது அவள் எண்ணம்.

ஆனால் விருப்பையும் வெறுப்பையும் ஒருவர் மனத்தில் பலவந்தமாகத் திணிக்க முடியாமல் இருப்பதை எண்ணித் தான் சுசீலா உள்ளத்துக்குள்ளேயே பொருமி வந்தாள். ஹரி பாட ஆரம்பித்ததும் விழித்துக் கொண்ட சுசீலா முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். தன் தாயிடம் எரிந்து விழுந்தாள். ‘துரங்க விடாமல் என்ன அம்மா இது? அப்பா ஊரில் இல்லாத இந்த ஒரு நாள் சாதகம் பண்ணா விட்டால் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? பொழுது விடிந்து பாடினால் போதாதா? கூப்பிட்டுச் சொல்லேன் அம்மா’ ஒன்று கெஞ்சினாள்.