பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்குறுதி 225.

மின்னலைப் போல் மறைந்தான். ஹரி வேகமாகத் தெற்கு நோக்கி நடந்து அந்தப் பயங்கர எல்லையைக் கடந்தான்.

ஹரி தவித்துக் கொண்டிருந்தான். திருடனைப் போல், “எப்போது இருட்டும், எப்போது இருட்டும்” என்று அவன் மனம் இருட்டுக்காக ஏங்கியது. இருட்டியதும் சொன்னபடி தவறாமல் பக்கிரி வரவேண்டுமே என்று கவலைப்பட்டான். அப்படியே வந்தாலும் வழியில் எங்காவது மாட்டிக் கொள்ளாமல் நகையோடு வந்து சேர வேண்டுமே என்று, வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டான். வந்ததும் பக்கிரியை எங்கே சந்திக்க வேண்டும் என்று, இருட்ட ஆரம்பிக்கு முன்பே ஒரு முறை கொல்லையில் ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

“நம் வீட்டிலுள்ளவர்களே குருவின் வீட்டுச் சொத்தைத் திருடுவதா? இது மிகப் பெரிய துரோகம் அல்லவா? அந்தக் குற்றத்தை யார் செய்தால் என்ன? அதில் நமக்கும் பங்கு உண்டல்லவா? பக்கிரி மாமாவிடமே நேரில் சென்று வாதாடிப் பார்ப்போம். மசிந்தால் நம் மானம் பிழைக்கட்டும். மசியாவிட்டால் போலீஸ் இருக்கவே இருக்கிறது என்ற எண்ணத்துடனேயே அவன் அரசூருக்குப் போனான்.

ஆனால் அங்கே சென்றபோது. அவன் எண்ணத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடந்தேறிவிட்டன. வலுவில் எப்படியோ ஒரு நிர்ப்பந்தத்தில் சிக்கிக்கொண்டு, சம்பா திக்கத் துவங்குமுன்பே செலவுக்கு ஒப்பந்தம் தேடிக் கொண்டதோடு மட்டுமின்றிச் சத்தியமும் செய்து கொடுத் தாகிவிட்டது.

ஹரி உள்ளே நுழைந்ததும், ‘யாரோ உங்களைக் கலெக்டர் வீட்டில் பார்த்ததாகச் சொன்னார்களே! அதற்குள் எப்படி இங்கே வந்தீர்கள், டீச்சர் ஸ்ார்?’ “ என்று சுசீலா கேலியாகக் கேட்டாள்.