பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 புல்லின் இதழ்கள்

அவன் மனம் கவலைப்பட்டபோது காந்தாமணி பாட்டை முடித்துவிட்டு, தம்பூராவை ஹரியின் பக்கம் திருப்பினாள்.

ஹரி அவளை பரிதாபமாகப் பார்த்தான். இன்று என்னை விட்டுவிடு. நான் மிகவும் சோர்ந்து போய், உடல் நலமில்லாமல் வந்திருக்கிறேன். நம்முடைய போட்டியை இன்று ஒரு நாள் ஒத்தி வைத்துக் கொள்ளலாமே!’ என்று அவன் விழிகள் அவளிடம் கூறாமல் கூறின. ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியாத காந்தாமணி, என்ன யோசிக்கிறீர்கள்? இப்படியே ஒவ்வொரு தடவையும் பயப்படுகிற மாதிரி நடித்துவிட்டுப் பிறகு நான் பாடின இடமே தெரியாமல் அடிப்பதுதானே உங்கள் வழக்கம்? இன்று மட்டும் என்ன?’ என்று துரிதப்படுத்தினாள்.

காப்பியின் தெம்பும், மாத்திரையின் சக்தியும் அடங்கி ஒய்ந்து கொண்டிருந்த வேளையில், காந்தாமணியின் உற் சாகமூட்டும் வார்த்தைகள் அவனை எங்கோ கொண்டு செல்வதுபோல் இருந்தன. அவள் கையில் இருந்த தம்பூராவை ஹரி கையில் வாங்கிக் கொண்டான். சற்றைக் கெல்லாம் தன்னை மறந்து ஆவேசம் வந்தவனைப் போல் அவன் பாடிக் கொண்டே இருந்தான். காந்தாமணி கூறிய வார்த்தைகள் மெய்யோ, பொய்யோ; ஆனால் உண்மையிலேயே அவன் அந்த ராகத்தைப் பாட ஆரம்பித்த பிறகு, அவள் அத்தனை நேரம் கொண்டு வந்து நிறுத்திய லதாங்கி எங்கோ ஒடியே போய்விட்டாள்.

கடிகாரம் அறுபது நிமிஷத்தை எப்பொழுதோ கடந்து சென்றுவிட்டது. கண்களில் மாலை மாலையாக நீர் வழிந்தோட ஹரியைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

திடீரென்று ஹரியின் பார்வையில் ஒரு பயங்கரத்தை அவள் கண்டாள். அவன் கையில் இருந்த தம்பூரா அவன் பிடியிலிருந்து நழுவியது. இமைக்கும் நேரத்துக்குள், அவள் சட்டென்று விழப்போன தம்பூராவைக் கையில்