பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 புல்லின் இதழ்கள்

ஆலுங்கள். இன்னும் ஒரு வாரத்துக்குத் தம்பூராவின் பக்கமே இரண்டு பேரும் போகக் கூடாது’ என்று கூறிச் சென்றார் டாக்டர்.

ஹரியும் காந்தாமணியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். உடனே ஹரி, இப்பொழுது எனக்கு ஒன்றுமில்லை. வீணே நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. மத்தியான்ன வண்டிக்கே நான் ஊருக் குப் போயாகவேண்டும். ஒரு தகவலும் இல்லாமல், என்னைக் காணவில்லையே என்று அங்கே எல்லாரும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எப்படியும் நான் இன்று புறப்பட்டுப் போய்விடத்தான் போகிறேன்’ என்று ஹரி தீர்மானமாகக் கூறினான்.

இதைக் கேட்டதும் காந்தாமணியும் அவள் தாயும் ஹரியை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

‘நன்றாகத்தான் இருக்கிறது! ஏன் ஸார், இதை நீங்கள், டாக்டர் வந்தபோது சொல்லுவதெற்கென்ன? அவரைக் கேட்காமல் இப்போது உங்களை அனுப்பிவைத் தால் அவருக்கு நாங்கள் என்ன பதில் சொல்லுவது?” என்று உள்ளபடியே பயந்ததுபோல் காந்தாமணியின் தாய் கூறினாள்.

காந்தாமணியும், தாயின் வார்த்தைகளையே ஹரிக்குச் சிபாரிசு செய்தாள். உங்களை இரண்டு நாளைக்குக் கட்டிலை விட்டுக் கீழே இறங்க, நான் அநுமதிக்கமாட் டேன். யார் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை : என்று கூறிய காந்தாமணி, பதிலுக்குக்கூட காத்திராமல் தாயையும் அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டாள்.

டி . தனிமையில் இருந்த ஹரியைச் சிந்தனை மொய்த்துக் கொண்டது. அந்தச் சிந்தனைகளில் சுசீலாவும், வசந்தி யும் காயத்திரியும், பாகவதரும், லட்சுமியம்மாளும், சுந்த ரியும் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.