பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 புல்லின் இதழ்கள்

னாலும், போலிக் கெளரவத்தினாலும் இறுமாந்திருந்த சுசீலாவின் கண்ணைத் திறந்த விட்டவர்கள் வசந்தியும்: காந்தாமணியுந்தாம்.

அன்று நீ தஞ்சாவூரில் தங்கிவிட்டவுடன், அவள் மனம் தவித்த தவிப்பையும், உனக்காக அவள் தனிமை யில் சென்று அழுது தீர்த்து முகம் வீங்கி வெளி வந்ததையும் நான் காணத் தவறவில்லை. ஆனால், அவ ளுக்கு உலகத்துக்காக ஒன்று செய்யத் தெரியாது. பச்சைக் குழந்தையைப் போல; சிரிப்பு வராமல் சிரிக்கத் தெரியாது; அழுகை வந்தால் அடக்கிக்கொள்ளத் தெரி யாது. இந்தக் குறைக்காக அவளை நீ வெறுத்துவிடப் போகிறாயா? அல்லது உன் விவேகத்தினால், இதுவே போலியற்ற’ நிறைவு என்ற உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ளப் போகிறாயா?

“நான் என் வாழ்வை இழந்ததைப் பற்றிக்கூட எண்ணி வருந்துவதில்லை. இந்த உலகில் என்னுடைய மிகப் பெரிய கவலைகளில் ஒன்று - சுசீலாவைப் பற்றியது. அவளுடைய இந்த விசித்திரமான உள்ளத்தைப் புரிந்து கொண்டு அவளை இறுதிவரை வெறுக்காத புருஷனாக அவளுக்கு வாய்க்க வேண்டுமே. என்பதுதான் அது. சுசீலாவாக விரும்பாத வரையில், அவளை யாரும் எந்த விஷயத்திலும் திருப்பிவிட முடியாது. ஆனால், அவள் மனம் உன்னை நாடுகிறது என்பதை அறிந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனெனில் அவளுக்காக நீ பிறந்திருக்கிறாய்; அதற்காகவே தெய்வம் உன்னை இங்கே கொண்டு சேர்த்திருக்கிறது என்பது என் நம்பிக்கை. ஆகவே உன் நன்மையைக் கருதி இல்லை என்றாலும்; சுசீலாவைக் கருதியாவது நீ இந்தக் காரி யத்தைச் செய்வாய் என்ற என் நம்பிக்கையை நீ தகர்க்க ாம .டாய் என்றே நினைக்கிறேன்.'