பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பெண் 81

சுந்தரியின் பாட்டி இறந்து போன செய்தியைக் கணவர் மூலம் அறிந்ததும் லட்சுமி ஒருமுறை திருவிடை மருதுா ருக்குச் சென்று துக்கம் விசாரித்து வந்தாள். பிறகு அடிக்கடி சுந்தரியைப் போய்ப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தால்தான் மனத்துக்குச் சமாதானம் ஏற்படும் போலிருந் தது லட்சுமிக்கு. வெள்ளை உள்ளத்தோடு மனம் விட்டுப் பழகும் சுந்தரியின் குழந்தையுள்ளமும், செல்வத்தில் புரண்டும்; துளியும் கர்வமில்லாத அவள் பண்பும் லட்சுமி யைப் பெரிதும் ஈர்த்துவிட்டன.

தன் கணவருடைய விருப்பம் இல்லாமலோ அல்லது அவராகவே விரும்பியோ, எப்படியோ சுந்தரி அவர் வாழ்வில் பங்கு பெற்று விட்டாள். அதற்காக லட்சுமி சுந்தரியை வெறுக்கவில்லை; தன் வாழ்வில் குருக்கே வந்து விட்டவளாக எண்ணவில்லை. இனி நீயும் நானும் அவருடைய இரு கண்கள்’ என்றாள். அதை நிரூபிக்கச் சுந்தரியின் பாட்டி இறந்தது லட்சுமிக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பமாக அமைந்தது.

கணவரோடு மீண்டும் ஒரு நாள் சென்ற லட்சுமி, * நீ தனியாக இவ்வளவு பெரிய வீட்டில் இருந்து என்ன பண்ணப்போகிறாய்? என்னுடன் கொஞ்ச நாள் வந்து இரு. மனத்துக்கும் ஆறுதலாக இருக்கும்’ என்று கூறிப் பிடிவாதமாக அவளைச் சுவாமி மலைக்கு அழைத்து வந்து விட்டாள்.

அப்போது காயத்திரி ஐந்து வயதுப் பெண். சுசீலா வுக்கு ஒரு வயது. சுந்தரிக்குச் சுவாமிமலை வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. நாள் முழுவதும் வீடு நிறையச் சிஷ்யர்களையும், ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் ஞானத்துக்கும் அநுபவத்திற்கும் தகுந்தாற் போல் முன்னும் பின்னுமாகப் பாடங்கள் நடந்து வருவதையும் கண்டு. ரசித்தாள்.