உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புள்ளிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டது மாத்திரம் அல்ல: அவனுடைய வாழ்க்கை லட்சணங்களைப்பார்த்தால் கூட அவன் மிகவும் தந்திரசாலி யாகவும் இருந்திருக்கிறான். முசோலினி இத்தாலிய நாட்டினுடைய பெரும் புள்ளியல்லவா? எப்படித் தந்திரசாலியாக இருந்தான் என்றால், அவனுக்கு தலைவழுக்கையாம். அந்த வழுக்கைத்தலை இருப்பது யாருக்கும் தெரியக் கூடாதென்பதற்காக அறவே மொட்டையடித்து விட்டானாம். அறவே மொட்டையடித்துக்கொண்ட காரணத்தால் முசோலினி மொட்டையடித்துக் கொண்டு விட்டான் என்று ஊர்பேசியதே தவிர, வழுக்கைத் தலை என்று சொல்லவில்லை. அவனுடைய ஐம்பதாவது ஆண்டு விழா வந்ததாம். ஐம்பதாவது வயது என்று யாருக்கும் சொல்லக்கூடாது என்று ஆணையிட்டு விட்டானாம். காரணம் வயது தெரிந்துவிடும் என்பதற்காக. அப்படி முசோலினி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தினான். தன்னைப் பற்றிய எண்ணம் மக்களிடம் தாழ்வாக வந்துவிடகூடாது என்றும் தான் இளைஞனே என்கின்ற எண்ணம் இருக்க வேண்டும் - என்று அந்தப் பெரும்புள்ளி அன்றைக்கு நினைத்தது. ஆனால் அந்தப் புள்ளிகளுடைய முடிவெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல. மக்களை அதைப்போலவே பகுத்தறிவுக் கருத்துக்களை போதித்தவர்கள், மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்பதற்காக கொள்கைகளைப் போதித்தவர்கள் பலர். புத்தர் இங்கேதான் பிறந்தார். இந்தியாவிலேதான் வாழ்ந்தார். இந்தியாவிலே தான் அந்தப் புனிதமான கொள்கைகளைப் பரப்பினார். ஆனால் இந்தியாவிலே அவருக்கு சிறந்த இடமில்லை. அவருடைய மதம் இங்கே பரவவில்லை. அது சீனத்திலும், இலங்கையிலும் வேறு பல நாடுகளிலும் பரவியிருக்கிறது. இங்கே பரவ இயலாமல் தடுக்கப்பட்டு விட்டது. அந்தக் கொள்கைகளுக்கு இங்கே இடமில்லாமல் போய்விட்டது. 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புள்ளிகள்.pdf/26&oldid=1706225" இலிருந்து மீள்விக்கப்பட்டது