பக்கம்:பூங்கொடி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

70

75

80

85

இசைத்திறம் உணர எழுந்த காதை

இசையும் பொருளும் இனியகல் வாழ்வும் அடைதல் ஒன்றே அவர்குறி யாதலின் தடையும் செய்குவர் , தமிழில் இசையிலே, பாட்டிசைத் துறையில் பாஷைச் சிக்கல் நாட்டுதல் நன்றாே நாதம் ஒன்றே நோக்குதல் வேண்டும், மொழிவெறி நுழைப்பது குறுமனப் பான்மை, விரிமனங் கொள்க’ என்றெலாம் கதைப்பர் : இவ்வுரை கேட்டோர் ஒன்றும் ஒரார் ; உயரிய கல்வி கற்றார் சிலரே கற்றார் தம்முளும் சிந்தித் துணர்வார் சிலரினும் சிலரால் வந்தித் தவ்வுரை வாயென ஏற்பார் : நேரிய நம் சொலைச் சீரிய கன்றெனக்

கூறிப் பல்வகைக் குறைகளும் புணர்த்துவர் ;

தமிழிசை தழைக்கும்

ஆகலின் அன்னப் அத்துறை அனைத்தும் ஏதிலர் தமக்கே இரையா காமல், தாய்மொழி மானம் தமதென கினேயும் ஆய்முறை தெரிந்த ஆன்றாேர் தாமும் உயிரெனத் தமிழை உன்னுவோர் தாமும் செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும் புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்; தகுந்தோர் புகின்அது தழைத்திடல் ஒருதலை;

கூத்தும் பரவுக

கூத்தும் அவ்வணம் கூர்மதி யாளர்

காத்துப் போற்றின் கைம்மேற் பலம்ை ,

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/114&oldid=665589" இலிருந்து மீள்விக்கப்பட்டது