பக்கம்:பூங்கொடி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

90

100

195

மாணவன் கூற்று

கொலை படு கோமகன் கலையிசை வேட்டுப் பலநாள் எம்முடன் பயின்றனன் அறிவோம் ; ஈதொன் றன்றி வேருென் றறியோம் ; இது நிகழ்வில் ஏதும் கெரியோம் ; எமக்கிசை யூட்டுங் குலக்கொடி யாகிய மடக்கொடி பூங்கொடி மற்றவள் தோழி சண்டிலி என்பாள் தன்னுடன் கூடி விண்டொட கிவந்த வியன்பெரு மாளிகை வதிவதும் அறிவோம் வாய்மையிஃ தாகும் ; மதிலரண் சூழும் மாமனே யிதனுள் எதிரிகள் எவரும் எளிதிற் புகார் என

மாணவர் தம்முளோர் மாணவன் இயம்பக்

காவலர் குறுக்கு விை

காவிலா துாைத்ததைக் கேட்டஅக் காவலர் ,

அரண்படு மாளிகை ஆகலின் ஈண்டு முரணியோர் உட்புக முடியா தென்றன, அவ்வா. ருயின் அவனெடு முரணியோர்

எவ்வெவர் என்றெமக் கியம்புதி’ என்றனர் ;

மாணவன் மறுமொழி

முற்படு மாணவன் முரணியோர் உண்டெனல் கற்பனை யாகும் ; காப்பமைக் துளதால் மற்றவர் புகுந்து செற்றனர் என்று சொற்றிட இடமிலை சொல்லுமென் கருத்தைச் சுற்றி வளைத்து மற்றாெரு பொருளைப் படைத்திட வேண்டா பணிவுடன் வேண்டுவல்

170

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/189&oldid=665671" இலிருந்து மீள்விக்கப்பட்டது