பக்கம்:பூசைப் பாமாலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து, சிவனடியாருள் தலை நின்றவராகிய மணிவாசகப் பெருமான் மீது சிவஞான சுவாமிகள் பாடிய வணக்கப் பாடல் ஒன்று. அதன்பின் வாழ்த்து. இதோடு பாராயணம் முடிகின்றது. பிறகு நாள் தோறும் அமைக்கும் சந்தனத்தால் ஆகிய *மூர்த்தியை உட்கொள்ளும் போது, அதற்குப் பொருத்தமான, "கைப்போது மலர்தூவி' என்ற அப்பர் சுவாமிகள் தேவாரம். பின் ஒடுக்கத்தில் அதற்கு ஏற்ற 'மண் பொருந்தி வாழ்பவர்க்கும்' என்ற அ ப் பர் தேவாரம். முடிவில் ஒரு விநாயக வணக்கம். இறுதியாக, 'சீதமழை முகில் பொழிக!' என்ற திரிகூட ராசப்பக் கவிராயரின் ஒரு நல்வாழ்த்துப்பாடல். இதோடு பூசைப் பாடல் நிறைவு பெறுகின்றது. மொத்தம் நாற்பது பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்கும் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது. 24-3-66. ராய, சொ. 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/20&oldid=836370" இலிருந்து மீள்விக்கப்பட்டது