பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பூர்ணசந்திரோதயம்-1 மரத்தின்மேல் ஏறியோ அந்தப் பழத்தைப் பறித்து அதைத் தமது கைவசத்துக்குக் கொண்டுவந்தால், உடனே ஆவலோடு அதை உண்ணப் பிரியப்படுவார்கள். அதுபோல, நீ அடைய விரும்பிய பொருள் உன் கைக்குப் பக்கத்தில் வந்திருந்து, எடுத்துக்கொள், எடுத்துக்கொள் என்று உன்னை வருந்தியழைக்கையில் நீதுர நிற்பதேன்? உன்னைப் பார்த்தால் பார்சி ஜாதிப் பெண்போல இருக்கிறது. நீ யார் என்பதைச் சொல்லாவிட்டாலும் நீ இருப்பது எந்த ஊர் என்பதை யாவது சொல்லக்கூடாதா? நீ ன்ன் மேல் காதல் கொண்டிருப்பதாகச் சொல்வதிலிருந்து நீ என்னை இதற்கு முன் பார்த்திருக்கிறாய் என்பதும் தெரிகிறது. என்னை இதற்கு முன் நீ எப்போது பார்த்தாய், எவ்வளவு காலமாக என்னிடத்தில் ஆசை வைத்திருக்கிறாயென்பதை யெல்லாம் அறிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் மிகவும் தாகப்படுகிறது. நீ அவ்வளவு தூரத்தில் நிற்பதையும், உன்னுடைய இடை தள்ளாடுவதையும் பார்த்தால், என்னுடைய உயிரே துடிக்கிறது. நீ இப்படி வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து என்னென்ன விவரத்தை வெளியிடலாமோ அதைச் சொல்லி நான் உன்னிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதையும் வெளியிட்டால், நான் எப்போதும் உன்னுடைய அடிமையாக இருக்கத் தடையில்லை. நீ காலால் இடும் வேலையை நான் தலையால் செய்யக் காத்திருக்கிறேன்' என்று மிகவும் கனிவாகவும் பதைப்போடும் கூறி, மிகுந்த ஆவலைக் காண்பித்தார். அவருக்கு அருகிலிருந்த பிரமாதமான ஆவேசத்தில் தாம் எழுந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, அவளைக் கட்டித் தூக்கிக்கொண்டு வந்துவிடலாமா என்ற எண்ணம் தோன்றியதானாலும், அவள் முரட்டாள்களை உதவிக்கு வைத்திருப்பவளாதலால், தாம் ஆத்திரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துக் கொண்டு துன்பத்திலும் மாட்டிக் கொள்வதைவிட அவளது மனப்போக்கின்படி நடந்து அவளை