பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - - 117 ஜாக்கிரதையாகக் காரியத்தை முடித்துக் கொள்ளுகிறாய்! என்னுடைய வெறுங் கையெழுத்திருந்தால், நாளைய தினம், ஆதை நான் போடவில்லையென்று சொல்லிவிடுவேன் என்று நினைக்கிறாயா? உன்னுடைய பிரியப்படியே ஆகட்டும். இதோ இருக்கிறது முத்திரை மோதிரம். எடுத்து எத்தனை முத்திரை வேண்டுமானாலும் போட்டுக்கொள். நீ என்னுடைய மனுஷி ஆகிவிட்டா யென்பதற்கு உன்னுடைய நெற்றியில் வேண்டுமானாலும் இரண்டு முத்திரைகள் போட்டுக்கொள்' என்று மிகவும் குதூகலமாகப் பேசிக்கொண்டே தமது முத்திரை மோதிரத்தைக் கழற்றிக் கொடுக்க, அவள் பூரித்து மகிழ்வடைந்து புன்னகை செய்தவளாய், அவரை நோக்கி, “நான் தங்களுடைய மனுவி ஆகிவிட்டேன் என்பதற்கு என் முகத்தில் இந்த மோதிரத்தால் முத்திரை போட்டால் அதோடு நான் திருப்தியடைந்து விடுவேனோ? அந்த முத்திரை போட இந்த மோதிரத்துக்கு யோக்கியதை இல்லை. தங்களுடைய அதரங்களினால் அல்லவா அந்த முத்திரையைப் போட வேண்டும். இருக்கட்டும்; நான் உங்களை இலேசில் விடப் போகிறேனா? இதோ வந்துவிட்டேன்' என்ற பரிகாசமாகப் பேசிக் கொண்டே சற்று தூரத்திற்குப் போய், அரக்கை எடுத்து அந்தக் காகிதத்தினடியில் முத் திரை போட்டு அந்தக் காகிதத்தை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு மோதிரத்தை எடுத்துக் கொண்டு திரும்பி இளவரசரிடம் வந்து, மோதிரத்தைக் கொடுத்தாள். தமது கையை நீட்டி அதை வாங்கிய இளவரசர் அப்படியே அவளையும் பிடித்துக்கொள்ளுமாறு தமது கையை நீட்ட, அவள் இனிமையாகவும், மோகலாகிரி கொண்டவள் போலவும் தோன்றி நகைத்து, 'அந்தக் காகிதத்தை அங்கே வைத்திருக்கிறேன். அது பறந்து எங்கேயாகிலும் காணாமல் போய்விடும். இவ்வளவு சிரமப்பட்டு சம்பாதித்த விலையற்ற அந்த வஸ்துவை இழக்க மனம் வருமா? ஒரே நொடிநேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். அதை எடுத்துப்