பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 171 கொண்டாய்; உன்னை நான் கலியாணம் செய்துகொண்டு என்னுடைய மனோபீஷ் டத்தை நிறைவேற்றிக் கொள்ளா. விட்டால், அந்த துக்கம் என்னுடைய ஆயிசுகால பரியந்தம் நீங்காது. அதே ஏக்கத்தினால், நான் இளைத்து அகால மரணம் அடைந்துவிடுவேன் என்பது நிச்சயம். ஆகையால், நீ என் விஷயத்தில் இரங்கி, என்னைக் கடைத் தேற்ற விரும்புகிறேன் - என்று மிகவும் உருக்கமாகவும் விநயமாகவும் கூறிக் கெஞ்சி மன்றாடினார். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயத்தின் மனதும் கண்களும் கலங்கின. சேரங்குளம் இனாம்தாரான அந்த அழகிய யெளவன புருஷர், தன்னிடத்தில் அந்தரங்கமான காதலும் பிரேமையும் கொண்டு கபடமில்லாமல் உண்மையை வெளியிடுகிறார் என்பதை அவள் உணர்ந்தாள் ஆகையால், அவரது சொற்கள் அவளது மனத்தில் சுறுக்கென்று தைத்தன. அவள் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக நின்று ஏதோ சிந்தித்து ஒருவித முடிவிற்கு வந்தவளாய் அவரை நோக்கி, 'ஐயா! நீங்கள் சொன்ன வரலாற்றைக் கேட்க, உங்களுடைய விஷயத்தில் என் மனசில் நிரம் பவும் இரக்கமும் பச்சாதாபமும் ஏற்படுகின்றன. என் பொருட்டு நீங்கள் வீண்பொருள் நஷ்டமடைந்ததன்றி, அநாவசியமான முயற்சிகளை எல்லாம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் என்னிடத்தில் உண்மையான காதல் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. அதோடு நீங்கள் என்னைக் கிரமப்படி கலியாணம் செய்து கொள்ள எண்ணுகிறீர்கள் என்பதும் சந்தேகமற விளங்குகிறது. அப்படி இருந்தும், இது ஒருதலைக் காமமாக இருக்கிறது. நான் உங்களை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். உங்களுடைய மனசில் உண்டாகியிருக்கும் காதலும் நெகிழ்வும் பிரேமையும் என் மனசிலும் உண்டானால் அல்லவா, நான் உங்களுடைய ஏற்பாட்டிற்கு இணங்கலாம். என் மனசில் அப்படிப்பட்ட மாறுபாடுகள் ஒன்றும் இன்னமும் ஏற்படவே இல்லை. நான் உங்களுடைய