பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 241 அதைக்கேட்ட பெண்பாவை, அந்தப் பண்டாரம் தனது விஷயத்தில் எவ்விதக் கைம்மாறும் கருதாமல் அவ்வளவு அதிகமான ஜீவகாருண்யமும் அன்பும் காட்டுவதைக் குறித்து அளவுகடந்த நன்றியறிதலும் பயபக்தியும், பணிவும் மரியாதையும் வைத்தவளாய், அவரைநோக்கி, 'அடடா! சுவாமிகளுக்கு இன்றையதினம் என்னால் எவ்வளவு பிரயாசை தாங்கள் இல்லாவிட்டால் இன்றோடு நான் தீர்ந்துபோயிருப்பேன். தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பிறப்பு: இன்றைய தினம் நான் தப்பிப் பிழைத்தது, சுவாமிகளின் அருளினால் ஏற்பட்ட இரண்டாவது பிறப்பு; என்னவோ, தெய்வந்தான் இன்றைய தினம் தங்களைச் செட்டியாருடைய பாங்கியில் கொண்டுவந்து வைத்து என்னைச் சந்திக்கச் செய்தது. ஈசுவரன் இல்லாமலா எத்தனையோ சதகோடி ஜீவ ஜெந்துக்கள் எல்லாம் இந்த உலகத்தில் வாழ்கின்றன’’ என்று பெரிய தத்துவம் பேசிய வண்ணம் பண்டாரத்திற்குப் பின்னால் நெருங்கி நடந்து வந்தாள். பண்டாரம், 'ஆம் அம்மா! நீ சொல்வது உண்மையான விஷயம். கடவுள் எங்கும் நிறைந்த பராபர வஸ்துவல்லவா? அவருக்குத் தெரியாத சங்கதி ஒன்றுமில்லை. அவர் இரவு பகல் எப்போதும் இமைகொட்டாமல் விழிப்பாகவே இருக்கிறார். மனிதரைப்போல அவர் மாத்திரம் ஒரு நொடிப்பொழுது கண் அயர்வாரானால், இந்த உலகம் ஒர் இமைப் பொழுது நிலை நிற்குமா எளியோரை வலியோர் அடித்து வாயில் போட்டுக்கொண்டு விட மாட்டார்களா ஆன்ால் கடவுளுடைய படைப்பில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. நல்ல வஸ்துக்களையும் அவர் தான் படைக்கிறார். கெட்ட வஸ்துக்களையும் அவர்தான் படைக்கிறார். அதுபோல, நல்ல மனிதர்களையும், துஷ்டர்களையும், நற்குணத்தையும், கெட்ட குணத்தையும், இன்பத்தையும், துன்பத்தையும் எல்லாவற்றை யும் அவர்தான் படைக்கிறவர். உலகத்தில் கெடுதலே பூ.ச.-17