பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 247 போனார். உட்புறம் முழுதும் இருளே மயமாக இருந்தமையால் ஷண்முகவடிவும் அவரோடு தொடர்ந்து செல்ல அஞ்சி, வெளிப் பக்கத்திலேயே நின்றாள். உள்ளே நுழைந்த பண்டாரம் ஏதோ சாமான்களை உருட்டி ஓசை செய்து இரண்டொரு நிமிஷத்தில் ஒரு விளக்கைக் கொளுத்தி வைக்க, உடனே வெளிச்சம் பளிச்சென்று பிரகாசித்தது. உடனே பண்டாரம், 'அம்மா ஷண்முகவடிவு! வாசலிலேயா நிற்கிறாய் உள்ளே வா!' என்று அன்பாக அழைக்க, அந்த மடமங்கை அச்சமும் நாணமும் அடைந்தவளாய்த் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தாள். உட்புறத்தில் தாழ்வாரம் கூடம் முற்றம் முதலியவைகள் காணப்பட்டன. கூடத்தின் ஒரு பக்கத்தில் படங்கள் விக்கிரகங்கள் முதலியவை வைக்கப்பட்டி ருந்தமையால், அது ஒரு மடம் போல இருந்தது. அதைக் கண்டவுடனே ஷண்முக வடிவின் மனதிலிருந்த சொற்ப சந்தேகமும் நிவர்த்தியாயிற்று. அந்தப் பண்டாரம் பரோபகார சிந்தையும், அருளும் நிறைந்த புண்ணியாத்துமா என்றும், அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் நிஜமானவை என்றும், தனக்கு அதன்பிறகு குடியர்களாலாகிலும் திருடர்களால் ஆகிலும் எவ்விதப் பொல் லாங்கும் நேராது என்றும் உறுதியாக நினைத்தவளாய், அவ்விடத்திலிருந்த விக்கிரகங்கள் படங்கள் முதலியவற்றின் முன்பாகப் போய் பயபக்தியோடு குனிந்து கைகுவித்து அஞ்சலி செய்து நின்றாள். உடனே பண்டாரம், 'அம்மா குழந்தாய்! உனக்கு வீட்டுக்குப் போக நேரமாகிறது அல்லவா, நீ இங்கேயே இரு; இவ்விடத்தில் எவ்விதப் பயமும் இல்லை. நான் போய் இதோ பக்கத்திலிருக்கும் பெரிய பண்ணைப் பிள்ளையை அழைத்துக் கொண்டு ஒரு நிமிஷத்தில் வந்து சேருகிறேன். வாசல் கதவை மூடி உள்பக்கத்தில் தாளிட்டுக்கொள்; இது முதல் கட்டு. இரண்டாவது கட்டு பின்பக்கத்தில் இருக்கிறது. அங்கே ஜனங்கள் இருக்கிறார்கள். நீ இங்கே தனியாக இருப்பதாக நினைத்து அச்சம் கொள்ளாதே' என்று கூறிவிட்டு